மத்திய சாலை போக்கு வரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஜூன் மாதம் இலங்கை கடற்படை யினரால் கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 40 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் தொடர்ந்து வலியுறுத்திவந்தேன்.

அவரும் 40 மீனவர்களின் விடுதலைக்காக பெரும்முயற்சி எடுத்தார்கள். சுஷ்மா சுவராஜின் வேண்டுகோளை ஏற்று, இலங்கை அரசாங்கமும், மீனவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தின் மூலமாக விடுதலை செய்துள்ளது பெரும்மகிழ்ச்சியை தருகிறது. என்னுடைய கோரிக்கையை ஏற்று, இலங்கையில் சிறைப்பட்டிருந்த அனைத்து மீனவர்களையும் விடுவிக்கசெய்த சுஷ்மா சுவராஜூக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது மனப் பூர்வமான நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply