காங்கிரஸ் துணையின்றி ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுகோடா தலை மையிலான அரசு ரூ.4000 கோடி ஊழல் செய்ய வாய்ப்பில்லை என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

ஆதித்யபூரில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் அவர் பேசியதாவது;

மாநிலத்தில் ஊழலை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் கூட்டணி குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளம்- ஐக்கிய ஜனதா தளம்(யு) கட்சிகள் சேர்ந்துள்ள கூட்டணி, சந்தர்பவாத கூட்டணி. இந்தகட்சிகளுக்கு எதிராக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் .

ஜார்க்கண்ட் மாநிலம் உருவான போதுதான் சட்டீஸ்கர் உருவானது ஆனால் அங்குள்ள வளர்ச்சி இங்கு இல்லை. ஜார்க்கண்ட் உருவாகி 14 ஆண்டுகளில் காங்கிரஸ்தான் இங்கு பெரும்பான்மையான ஆண்டுகள் ஆட்சியிலிருந்தது.எனவே காங்கிரஸ்தான் ஜார்க்கண்ட் வளர்ச்சி யடையாததற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

Leave a Reply