மனிதர்கள் கைகளால் கழிவுகளை அகற்றும் அவலத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக, அந்நபரின் குடும்பத்துக்கு ரூ.40,000 நிவாரண உதவிவழங்கப்படும். ஆனால், இது குறித்த தகவல்களை ஒரு சில மாநிலங்களே அளித்துள்ளன என்று மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநில அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது:

கழிவுகளை கைகளால் அகற்றும்பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பங்கள் பற்றிய போதுமான தகவல்களை 10 அல்லது 11 மாநிலங்களே அளித்துள்ளன. கைகளால் கழிவுகளை நேரடியாக அள்ளும் பணியில் ஈடுபடுத்துவதை தடுத்தல் மற்றும் மறு வாழ்வு சட்டம் 2013ன் படி, இந்த மோசமான நடைமுறையை முற்றிலும் ஒழிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது.

கைகளால் கழிவு அகற்றும்பணியில் ஈடுபட்டுள்ளவரின் குடும்பத்துக்கு ஒருமுறை நிவாரண உதவியாக ரூ.40,000 அவரது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

Leave a Reply