சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அமெரிக்க சந்தைகளில் தடை? சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அமெரிக்க சந்தைகளில் தடை விதிக்கவேண்டிய 8 பொருட்கள் அடங்கிய பட்டியலை ஆப்பிள்நிறுவனம் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்திடம் தந்துள்ளது .

இந்தபட்டியலில் கேலக்சி வடிவில் அமைந்துள்ள ஸ்மார்ட் போனும் இடம் பெற்றுள்ளது. சாம்சங் நிறுவன பொருட்களை தடைசெய்ய கூறி ஆப்பிள் நிறுவனம் கொடுத்தபட்டியலில் கேலக்சி எஸ் 4ஜி, கேலக்சி எஸ் 2, கேலக்சி எஸ் 2 ஏடி-டி, கேலக்சி எஸ் 2 எபிக் 4ஜி, கேலக்சி எஸ் 2 டி-மொபைல், டிராட் சார்ஜ், கேலக்சி எஸ் ஷோகேஸ் மற்றும் கேலக்சி பிரிவேல் உள்ளிட்டவை அடங்கும். தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை காப்பியடித்ததாக ஆப்பிள் நிறுவனம் குற்றம்சுமத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.