எந்த தெய்வத்திற்குப் பூஜை செய்தாலும் முதலில் விநாயகருக்கு ஸங்க்ரஹ பூஜை ஒன்றைச் செய்த பிறகே – அந்த தெய்வத்திற்கான பிரதான பூஜையைத் தொடங்குவது வழக்கம். அந்த விநாயகர் பூஜையில் நாம் கணபதியை வழிபட நெற்றிப் பொட்டில் குட்டிக் கொண்டுக் கீழ்க்கண்ட சுலோகத்தைச் சொல்வது வழக்கம்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும
சசிவர்ணம் சதுர்புஜம
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ
விக்நோப சாந்தய

இதில் கணேசரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. 1. சுக்லாம் பரதர வெள்ளை வ°த்ரம் கட்டிக் கொண்டிருப்பவர். 2. விஷ்ணும் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர். 3. சசிவர்ணம் நிலா மாதிரி பால்போன்ற நிறமுடையவர். 4. சதுர்புஜ நான்கு கைகள் உள்ளவர். 5. ப்ரஸந்ந வதநம் நல்ல மலர்ந்த முகமுள்ளவர

இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கை யால் இடப்புறத்திலும், இடக் கையால் வலப்புறத்திலும் முன் மண்டையில் குட்டிக் கொள்வது முறை. விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து காவிரி பெருக்கெடுத்தோடச் செய்தார். பின் காக்கை வடிவம் நீங்கி அந்தணச் சிறுவனாய் மாறினார

அவரைத் துரத்தித் தலையில் குட்டுவ தற்காக விரைந்தார் அகஸ்தியர். பின் விநாயகர் தமது  உண்மை வடிவில் காட்சியளித்தார். குட்டுவதற்கு ஓங்கிய கையால் தம் நெற்றியில் குட்டிக் கொண்டார் அகஸ்தியர்.

“உமது திருமுன்னர் நெற்றியில் குட்டிக் கொண்டு வழிபடும் மெய்யன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும்” என்று அகஸ்தியர் வேண்டினார். விநாயகப் பெருமானும் அவ்வாறே செய்வதாக வாக்க ளித்தார். தலையில் குட்டிக் கொள்ளும் இடத்தில் (இரு புறமும்) உள்ளது

பேச்சுத் திறன் நன்கு வளர்ச்சி யடைய காது கேட்பது அவசியம். ஞாபக சக்தியைத் தூண்டும் நாடிகள் அமைந்துள்ள இடமும் இதுவே. தனது பணியைச் செவ்வனே செய்தால் மட்டுமே இது சாத்தியம். நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளும்போது அங்கே உள்ளடங்கி இருக்கும் அமிர்த கலசத்தை எழுப்பி அங்கே உள்ள அமிர்தம் தேஹம் முழுவதும் பரவச் செய்வதற்கே என யோகிகள் கூறுவர்.

விநாயகர் வழிபாட்டில் மட்டுமே இடம்பெறும் இன்னொரு சிறப்பு அம்சம் தோப்புக்கர்ணம் போடுவது. நமது மூலாதாரத்தில் உள்ளவர் கணபதியே என்பதை எடுத்துக் காட்டவே இந்த வழிபாட்டுச் செயல். தோப்புக் கரணம் மூலாதாரத்தில் உள்ள சுஷும்னா நாடியைத் தட்டி எழுப்புவதற்காகவே போடப்படுகிறது. விநாயகருக்கு முன் காதுகளைப் பிடித்து, நெற்றியில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுவதும் -எவ்வளவு உயர்ந்த மனிதன் ஆனாலும் சிந்தையைக் கட்டுப்படுத்தி, வாழ்க்கையில் பணிவுடன் இருக்க வேண்டும் என்பதைக் காட்டவே.

அடங்காதவனுக்கும் பணிவு வரத் தோப்புக்கர்ணம் போடவைக்கும் முறை இந்த அடிப்படையிலேயே ஏற்பட்டது. “தோர்பி கர்ணம்” என்பதே தோப்புக் கர்ணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் இரண்டுக்கும் மேற்பட்ட கைகளைக் குறிக்கும். இது பஹு வசனம். பன்மைச் சொல். “கர்ணம்” என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினு டைய சக்கரத்தை அவரது சகோதரி மைந்தனான பிள்ளையார் தம் வாயில் போட்டுக் கொண்டு விட்டாராம். அவரைச் சிரிக்க வைத்து அவர் வாயிலிருந்து சக்கரத்தைக் கீழே விழச் செய்ய மஹாவிஷ்ணு தனது நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு கால்களை மடக்கி தாழ்ந்தும் எழுந்தும் கோணங்கி செய்தாராம்.

குழந்தை கணேசர் இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம். சக்கரமும் கீழே விழுந்ததாம். ஆகவே தோப்புக் கரணம் போடுவது குழந்தை தெய்வமான பிள்ளையாரை சந்தோஷிக்கச் செய்யவே.

 இன்னொரு சம்பவமும் இதோடு கூறப்படுவதுண்டு. தேவர்கள் கயமுகாசுரனின் (கஜமுகாசுரன்) சந்நிதியில் தோப்புக் கரணம் இட்டு வந்தனர். அவனை விநாயகர் ஸம்ஹரித்த பிறகு அவன் முன்னர் இட்ட தோப்புக் கரணத் தையும், தலைக் குட்டுதலையும் நன்றியறிவு காரணமாக விநாயகரின் திருமுன்பு செய்யத் தொடங்கினர். இன்று தொட்டு எம்மைப் போன்று உலகுளோர் உன்முன் தோப்புக் கரணம் போட்டு வணங்கினால் அவர்கள் குறை தீர்த்து நல்லருள் செய்ய வேண்டுமென வேண்டினர்.

“உன்றன் முன்னம் உலகுளர் யாவரும
இன்று தொட்டெமைப் போல் இப்பணிமுற
நன்று செய்திட நல்லருள் செய்கென”

என்பது கந்தபுராணம். விநாயக பெருமானும் தேவர் கூற்றிற்கு அருள் பாலித்தார். இதிலிருந்து விநாயகர் முன் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் மரபு உண்டானது.

ஒரு குற்றவாளி தான் செய்த குற்றத்திற்காக தண்டனையைத் தானே அனுபவிப்பது போல, கடவுளின் சமீபத்தில் செல்வதற்கு தகுதியில் லாதபடி குற்றங்கள் நிறைந்தவர். தாம் செய்த குற்றத்திற்குத் தாமே தண்டனை அனுபவிக்க மேற்கூறியவாறு செய்து, இனி அவ்விதக் குற்றங்கள் செய்ய மாட்டேன் என உறுதி செய்வதே ஆகும்

பிள்ளையார் வழிபாட்டில் மூன்றாவது சிறப்பு அம்சம் சிதறுகாய் போடுவது.

விநாயகர் முன் தேங்காய் விடலை இடுவது, தேங்காய் சிதறுவது போல நமது பாவங்கள் அல்லது நமக்கு ஏற்படும் இடையூறுகள் யாவும் சிதற வேண்டும் என்ற  தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவது. அஹங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது என்றும் கூறுவர்.

பிள்ளையாருக்குப் போடுகிற சிதறுகாய் ஏழைக் குழந்தைகளுக்குப் ப்ரஸாதமாகக் கிடைக்கிறது. ஏழை எளியவர்களின் தெய்வமான பிள்ளை யார், ஏழைக் குழந்தைகளுக்கு இதில் முன்னுரிமை கொடுத்திருப்பதில் ஆச்சரியம் இல்லைதானே.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். இன்றைக்கு எந்த தெய்வத்தின் சந்நிதியிலும் அர்ச்சனை செய்து தேங்காய் உடைத்து நிவேதனம் செய்யும் மரபு – இந்தத் தேங்காய் உடைக்கும் பழக்கமே பிள்ளையார் அருளால் வந்ததுதான். விக்னேச்வரர் தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து, “உன் சிரசையே எனக்கு பலி கொடு” என்று கேட்டுவிட்டாராம்.

எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மஹாகணபதிக்குப் ப்ரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்பதற்கு அறிகுறியாகத்தான் ஈசுவரனைப் போலவே மூன்று கண்களை உடைய தேங்காயை ச்ருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அனுக்ரஹித்திருக்கிறார்.

பிள்ளையார் திருவுருவ தத்துவம்

பிள்ளையார் யானைத் தலையும் மனித உடலும் கொண்டுள்ளார். யானைத் தலையுடைய தெய்வம் என்று மாற்று மதத்தவர்கள் கேலி பேசுவதைக் கேட்கிறோம். இந்த தெய்வ  வடிவத்திற்குப் பௌராணிக ரீதியான விளக்கம் உண்டு. அதுபோலவே தத்துவ ரீதியான விளக்கமும் உண்டு. அம்பிகையின் சரீரத்தில் அவளது இயல்பான தெய்விக மணத்திற்கு மணம் கூட்டும் மஞ்சள் பொடி, குங்குமம், வாசனைப் பொடி முதலிய வற்றைத் தானே தன் சரீரத்திலிருந்து வழித்துப் பிசைந்து ஒரு வடிவம் தந்து அதற்கு உயிரூட்ட கணபதி ஆவிர்பாவம் ஆனதாக புராணம் கூறுகிறது.

கஜமுகாசுரனை அழிக்க அம்பிகை படைத்த உருவம் இது. அம்பிகையின் திவ்ய மங்கள சரீரத்திலிருந்து மங்கள வ°துவான மஞ்சள் பொடியை வழித்து மூலப் பிள்ளையாரை ச்ருஷ்டித்ததால்தான் இன்றைக்கும் எந்த சுபகார்யத்தின் ஆரம்பத்திலும் மஞ்சள் பொடியைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்துப் பூஜை செய்கிறோம்.

தேவகணங்கள், மனித வர்க்கம், விலங்கினம், பூதகணங்கள் என அனைத்து கணங்களுக்கும் நாயகனாக இந்த தெய்வம் விளங்குவதைக் குறிக்கவே -கழுத்துக்கு மேலே விலங்காகிய யானை முகம்; கழுத்துக்குக் கீழே குழந்தை வடிவிலான மனித உரு; பானை வயிறும் குறுகிய கால்களும் பூத கணங்களைப் போன்று அமைந் துள்ளன; தேவவர்க்கத்தைக் குறிக்க நான்கு கரங்கள்; ஐந்தாவது கரம் தும் பிக்கை; தேவர்களுள் முதல் பூஜை பெறும் தெய்வமாக இவர் இருக்கிறார். யானை முகம் தத்துவரீதியாக ப்ரணவ °வரூபம் என்பர். ப்ரணவ வடிவம் அமைந்துள்ளதை நோக்கு கையில் – யானையின் காது, தலை, துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்தது போல் தோன்றும். எனவே பிள்ளை யார் ஓங்கார மூர்த்தி என்பதை உணர வேண்டும்.

யானைக்கு புத்திக் கூர்மை, ஞாபக சக்தி எல்லாம் மிக அதிகம்; பிள்ளையார் அறிவே வடிவானவர். வலப்பக்கத்தில் தந்தம் இல்லாமலும் இடப்பக்க வாயோரம் தந்தத்தோடும் காட்சி தந்து -தந்தையின் அர்த்த நாரீச்வரத் தத்துவத்தை நமக்குப் புகட்டுகிறார். ஆண் யானைக்கு தந்தம் உண்டு; பெண் யானைக்கு தந்தம் இல்லை. எனவே பாதி ஆண் யானையாகவும் பாதி பெண் யானையாகவும் முகத்தளவில் காட்டுகிறார் கணநாதர்.

அவனது பேழை வயிறு அண்ட சராசரங்கள் அனைத்தும் அவனுள் அடக்கம் என்பதைக் குறிக்கிறது. கச்சையாக அவர் அணிந்துள்ள பாம்பு – சக்தியின் சின்னம். விநாயகரின் ஐந்து திருக்கரங்களில் மேலே உள்ள வலக்கரம் அங்குசத்தைத் தாங்கியுள்ளது. யானைமுகக் கடவுள் ஜீவர்களை நல்ல வழியில் நடத்துகிறார்; அதற்கு அறிகுறியாக இருப்பது இந்த அங்குசம். மேலே உள்ள இடக்கரத்தில் பாசம் உள்ளது; கணேசர் தீவினையாளர்களை அவன் பாசத்தைக் கொண்டு கட்டி அடக்குகிறார்.

கீழே உள்ள வலக்கரம் ஒடித்த ஒற்றைத் தந்தத்தையும், இடக்கரம் மோதகத்தையும் தாங்கி உள்ளன. ஐந்து கரங்களும் படைத்தல், காத்தல், அருள் புரிதல் முதலான ஐந்து தொழில்களையும் குறிக்கின்றன. விநாயகரின் வாகனம் மூஞ்சூறு

மூஞ்சூறு எப்படி யானையைச் சுமக்க முடியும்?

ஆன்மா பெரியதில் எல்லாம் மிகவும் பெரியதாகவும், நுட்பமான வற்றிலேயே மிக நுண்ணியமான தாகும் உள்ளது என்பதையே இது காட்டுகிறது. உடல் சிறிதானாலும் பெரிதானாலும் உள்ளிருக்கும் ஆத்ம வ°து ஒன்றே என்பதையும் இது குறிக்கிறது.

மூஞ்சூறு மண்ணைக் குடைவதுபோல அறிவைத் தோண்டி ஆய்பவன் ஞானத்தைப் பெற முடியும் என்பதையும், இறைவனிடம் பேரன்பு பூண்டால் வாழ்க்கைச் சுமை தெரியாது என்பதையும், இந்த மூஞ்சூறு வாகனம் உணர்த்துகிறது.

Tags; விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி விரதம் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , விநாயகர் சதுர்த்தி வரலாறு , விநாயகர் சதுர்த்தி விழா

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.