பீகாரில் லோக்சபா தேர்தலில்  40 தொகுதிகளிலும்  பா.ஜ.க    போட்டியிடும் பாரதிய ஜனதாவுக்கு தொடர்ந்து குடைச்சலை தந்து வந்த பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பதிலடி தரும் வகையல் , பீகாரில் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தாங்களே போட்டியிட போவதாக பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.

இது குறித்து பீகார் பாரதிய ஜனதா தலைவர் சிபி.தாக்கூர் தெரிவித்ததாவது , ஐக்கிய ஜனதாதளத்துடன் தினம் தினம் விரிசல் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் அந்த கட்சியுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திப்பது என்பது சாத்தியமி்ல்லாத ஒன்றாக மாறியுள்ளது. எனவே வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் நாங்கள் தயாராகி_வருகிறோம். இதை கட்சி மேலிடத்திடம் அறிக்கையாக அனுப்பிவிட்டோம் என்றார்.

Leave a Reply