உமா பாரதியின் சமக்ரா கங்கா யாத்திரை  28-ம் தேதி கங்கோத்ரியில் நிறைவடைகிறது கங்கையை சுத்தம் செய்ய கோரி உமா பாரதியின் சமக்ரா கங்கா யாத்திரை சென்ற மாதம் 21ம் தேதி விழிப் புணர்வு பிரச்சார பயணம் துவங்கியது. இந்த பயணக் குழு நேற்று வாரணாசி வந்தடைந்தது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா முன்னணி தலைவர்களில் ஒருவரான உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் தலைமையிலான கங்கைநதி கழிமுக ஆணையம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூடி நதியை சுத்தம்செய்வது குறித்தும் , சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கவேண்டும். ஆனால் பிரதமர் வழக்கமான கூட்டத்தையே நடத்தவில்லை.இக்குழுவிற்கு பிரதமர் தலைவராக உள்ளதால் , கூட்டத்தை நடத்துவதில் சிரமம் உருவாகிறது . எனவே அவருக்கு பதிலாக ஒருஅமைச்சரை நியமித்து கூட்டத்தை சரியாக நடத்த வேண்டும்.

கங்கை ஆற்றுப்படுகையில் இருக்கும் மக்களிடையே மாசுயில்லாத கங்கை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி வருகிறோம். எங்கள் சமக்ரா கங்கா யாத்திரை வரும் 28-ம் தேதி கங்கோத்ரியில் நிறைவடையும் என்றார்.

Tags:

Leave a Reply