உணவு பொருட்களின் கடும் விலையேற்றத்தின் காரணமாக 80 லட்சம் இந்தியர்கள் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

விவசாய உற்பத்திபாதிப்பு, உர விலை ஏற்றம், போதிய அளவில்

விவசாய நிலங்கள் இல்லாதது, வறட்சி, எண்ணெய் விலை ஏற்றம் போன்றவைகளும் இந்த வறுமைநிலைக்கு முக்கிய காரணம் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது . ஐ.நா.வின் உணவு , விவசாய கழகம் தெரிவித்திருக்கும் தகவலின்படி ஒருகுடும்பத்தின் வருமானத்தில் 65 சதவீதத்திற்கும் அதிகமானபணம் உணவிற்காக செலவிடபடுகிறது. இலங்கை, வங்கதேசம், நேபாளம், போன்ற நாடுகளில் உணவுபொருட்களின் விலை குறைவாகவே இருப்பதாகவும் , அதனால் அவர்கள் உணவுக்காக செலவழிக்கும் தொகை குறைவானது எனவும் ஐநா., தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply