பாஜக  மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி மர்ம நபர்களால்  வெட்டி  கொலை வேலூரில் பாரதிய ஜனதா மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

வேலூர் ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல மருத்துவர் அரவிந்த் ரெட்டி (38). பாரதிய ஜனதா மருத்துவர் அணி மாநில செயலாளர்.

இவரது மனைவி டாக்டர் சுதா. மகன் அரிகணேஷ் (9), மகள் தீக்ஷிதா (6). டாக்டர் அரவிந்த்ரெட்டி சென்னை, வேலூர் ரங்காபுரம், கொசப் பேட்டையில் நீரிழிவுநோய் தொடர்பான மருத்துவமனை வைத்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர்தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

வேலூர் சத்துவாச் சாரியில் புதிதாக கட்டியுள்ள வீட்டின் புதுமனை புகு விழா மற்றும் காட்பாடியில் கிளினிக்திறப்பு நடைபெறுவதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழை நண்பர்கள், கட்சிநிர்வாகிகளுக்கு நேற்று அளித்தார். இரவு 7 மணியளவில் கொசப் பேட்டை லட்சுமி பெருமாள்கோயில் தெருவில் உள்ள கிளினிக்கிற்கு சென்றார்.

பிறகு , அங்கிருந்து வெளியேவந்த அவர் காரில் ஏறமுயன்றுள்ளார். அப்போது, மூன்று மர்மநபர்கள் பைக்கில் வந்து சுற்றிவளைத்து வெட்ட முயன்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தப்பி ஓடினார். அவரை விரட்டிசென்ற மர்ம நபர்கள் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். ரத்தவெள்ளத்தில் சரிந்த அவர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலையாளிகள் பைக்கில் ஏறி மின்னல்வேகத்தில் தப்பினர்.

கொலை குறித்த தகவல்பரவியதும் பாரதிய ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கொசப் பேட்டை பகுதியில் குவிந்தனர். கொலையாளிகளை உடனடியாக கைதுசெய்யக்கோரி ஆரணி ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் எங்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.