ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால் வீடுகளை இழந்த வர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ஒருலட்சம் மற்றும் 50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளத்தில் வீடுகளை இழந்த ஜம்முகாஷ்மீர் மக்களுக்கு மேலும் ரூ.426.83 கோடி நிதியினை ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்ததொகை வீடுகளை இழந்தமக்களுக்கு கூடுதல் நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மாளிகை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்ததொகையின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1.87 லட்சம்மக்கள் பலனடைவார்கள் எனவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கின்றது.

Leave a Reply