இருக்கும் இடத்தை பொறுத்துதான் பதவிகளும், பரிசுகளும் கிடைக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கிய ஒரு சிறிய அளவு நிதியை கூட விட்டு வைக்க மனமில்லாமல் அதிலும் கையை வைத்து காசு பார்த்த சல்மான் குர்ஷித் சட்ட துறை அமைச்சர் பதவியிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவு துறை அமைச்சர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அம்பானிகள் ஆதாயம் பெற இயற்கை

எரிவாயுவின் விலையை உயர்த்தி அதனால் ஏற்ப்படும் நிதி சுமையை மக்களின் தலையில் சுமத்த மனம்மில்லாமல் அதற்க்கு தடை போட்ட ஜெய்பால் ரெட்டியோ பெட்ரோலியத் துறை அமைச்சர் பதவியிலிருந்து முக்கியத்துவம் இல்லாத அறிவியல் தொழில் நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார், இவைகள் அனைத்தும் காங்கிரஸ் அரசால் இது வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கை கோட்பாடுகளின் வெளிப்பாடே.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருக்கும் கிருஷ்ணா – கோதாவரி நதி படுகைகளில்     இடத்தை பொறுத்துதான் பதவிகளும், பரிசுகளும் காணப்படும் இயற்கை எரிவாயுவை எடுத்து, சுத்திகரித்து அதை அரசுக்கு விற்கும் குத்தகை உரிமையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்று செயல் படுத்தி வருகிறது . மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கிருஷ்ணா கோதாவரி நதி படுகையில் எடுக்கும் வாயுக்கான கட்டணத்தை 2014 ம் ஆண்டு வரை மாற்றக் கூடாது என்று 2010-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை சிறப்பு குழுவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த மணி சங்கர் அய்யர் அந்த பதவியிலிருந்து தூக்கப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி என கருதப்பட்ட முரளி தியோரா அந்த பதவியில் அமர்த்த பட்டர் , அதேபோன்று வந்தவுடனேயே ஒரு யூனிட்டு ரூ.124 என்று இருந்த விலையை ரூ.226 க்கு உயர்த்தி தனது விசுவாசத்தையும் காட்டினர். முரளி தியோராவின் செயல்பாடு மிகவும் அத்து மீறவே வேறு வழியில்லாமல் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெய்பால் ரெட்டி பெட்ரோலியத் துறை அமைச்சராக்கப்பட்டார்.

ஜெய்பால் ரெட்டி பதவி ஏற்றவுடனேயே முதல் வேலையாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட பெட்ரோலிய துறை செயலரை நீக்கி அதிர்ச்சி வைத்தியம் தந்தார் . மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மேற்க்கொண்ட ஒப்பந்தத்தை ஆராய்ந்தபொது ஏற்கனவே சொன்னபடி எரிவாயுவை எடுக்காமல், பாதியளவு மட்டுமே எடுத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். ஒரு யூனிட்டு எரிவாயு உற்பத்திக்கான செலவை ரூ.226 லிருந்து ரூ.756 க்கு விலையை உயர்த்த வேண்டும் என்ற ரிலையன்ஸ்ஷின் கோரிக்கையையும் 2010-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை சிறப்பு குழுவின் தீர்மானத்தை காரணம் காட்டி 2014 ஆம் ஆண்டு வரையில் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிராகரித்தார். அதாவது இந்த தேசத்தின் சொத்தான இயற்க்கை எரிவாயுவை சுத்திகரித்து விநியோகிக்க ஆகும் உற்பத்தி செலவை மட்டுமே அரசாங்கத்திடம் கேட்டு பெறவேண்டும், ஆனால் இவர்களோ பன்னாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்துக்கு ஈடாக உள்நாட்டில் தான் குத்தகைக்கு வைத்திருக்கும் இயற்கை எரிவாயு உற்பத்திக்கும் விலை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள் .

தனது கோரிக்கை நிராகரிக்க பட்டதால் ஒப்பந்த படி இயற்கை வாயுவை உற்பத்தி செய்யாமல் செயற்கையாக பற்றாக்குறையை உருவாக்கி உற்பத்தியை குறைத்து விட்டார்கள். கடந்த மார்ச் 2010ல் ஒரு நாளைக்கு 53-54 மில்லியன் கனமீட்டராக இருந்த இயற்கை வாயு உற்பத்தியை ஒரு நாளைக்கு 27.5 மில்லியன் கனமீட்டராக குறைத்தார்கள் . 2011-12ல் 72 மில்லியன் கனமீட்டராக இருந்திருக்க வேண்டிய சராசரி உற்பத்தி நாளைக்கு 42 மில்லியன் கனமீட்டராக குறைந்திருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ 20,000 கோடி நேரடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2012-13ல் 80 மில்லியன் கன மீட்டருக்கு பதிலாக 25 மில்லியன் கன மீட்டர்தான் உற்பத்தி செய்ய முடியும் என்று முரண்டு பிடிக்கிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ 45,000 கோடி இழப்பு ஏற்படும்.

ஒருலட்சம் கனமீட்டர் வாயு உற்பத்திக் குறைவு ஏற்பட்டால், 210 மெகாவாட் மின்சார உற்பத்தி குறையும். இதனால் 2011-12ல் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி இழப்பும் , 2012-13ல் 11,500 மெகாவாட் மின் உற்பத்தி இழப்பும் ஏற்படும். இதையெல்லாம் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெய்பால் ரெட்டி உண்மையிலேயே இயற்க்கை எரிவாயு பற்றக்குறையா அல்லது விலை ஏற்றத்துக்கு பிறகு கொள்ளை லாபம் அடிப்பதர்க்கான பதுக்கலா என ஐயம் கொண்டார்.

இதனை தொடந்தே ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளரின் ஆய்வுக்கு உட்படுத்த தடாலடியாக உத்தரவிட்டார். தான் ஒருதனியார் நிறுவனம், தனது செயல் பாடுகளை ஆய்வு செய்திட தலைமை தணிக்கையாளருக்கு உரிமையில்லை என்று ரிலையன்ஸ் வாதிட்டது. ஆனால் அரசுடனான உற்பத்திப்பங்கீட்டு ஒப்பந்த பிரிவு 1.9-ன் கீழ் அரசுக்குத் தணிக்கை உரிமைஉண்டு. ரிலையன்ஸ் செயல் பாடுகளை தலைமை தணிக்கையாளர் ஆய்வு செய்வதில் தவறேதும் இல்லை என்று ஜெய்பால் ரெட்டி கூறினார். ரிலையன்ஸ் செய்த தகிடு தத்தங்களை தலைமை தணிக்கையாளர் அம்பலப் படுத்தினார். இவையெல்லாம் ரிலையன்சுக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தின.

இயற்கை எரிவாயுவுக்கு கூடுதல்விலை நிர்ணயிக்கவேண்டும் என்ற அந்த நிறுவனத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமாறு மந்திரிகள் குழுவும், பிரதமர் அலுவலகமும் கேட்டுக்கொண்டும் ஜெய்பால் ரெட்டி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்தே அவர் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமைக்கோ , பிரதமருக்கோ தேச நலனில் இல்லாத அக்கறை ஜெய்பால் ரெட்டியிடம் இருந்ததால் அவரை மாற்றிவிட்டார்கள்.

இதற்கு முன்பு மணிசங்கர அய்யர் என்று ஒருவர் இருந்தார் அவர் ஈரானிலிருந்து எண்ணெய் குழாய்கள் மூலம் இந்தியாவிற்கு எண்ணெய்யை கொண்டு வந்திட கடும் முயற்சி எடுத்தார் . இது ஒரு நல்ல திட்டம், இதன் மூலம் பெட்ரோல் , இயற்க்கை எரிவாயு இறக்குமதிக்கான செலவு மிகவும் குறையும் என்ன செய்ய இந்த திட்டம் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்றாலும் , அமெரிக்க நலனுக்கு எதிரானதாயிற்றே. தேசத்தின், தேச மக்களின் நலனை தவிர்த்து மற்ற அனைவருடைய நலனிலும் அக்கறை கொண்டவர்களால் ஆளப்படும் இந்த நாட்டில் என்ன நடக்கும் வழக்கம் போல் அவரும் பெட்ரோலிய அமைச்சகத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

     இடத்தை பொறுத்துதான் பதவிகளும், பரிசுகளும் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கிய நிதியை தங்கள் பக்கம் ஒதுக்கி கொண்ட சல்மான் குர்ஷித்க்கு வெளியுறவு துறை அமைச்சர் பதவி, மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் இருந்து பல அப்பாவி உயிர்களை பாது காக்க முடியாமல் செயலற்று இருந்தது, வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் பரவியது, அசாம் இன மோதலை தடுக்க தவறியது என்று சாதனைகளைவிட சர்ச்சைகளையே அதிகம் சந்தித்த பா.சிதம்பரத்துக்கு உள்துறை அமைச்சகப் பொறுப்பில் இருந்து நிதிதுறை அமைச்சர் பொறுப்பு. வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மாநில மின்தொகுப்பு நிலையங்களை சரியாக பராமரிக்காமல் நாட்டில் உள்ள 22 மாநிலங்களையும், 60 கோடிக்கும் அதிகமான மக்களையும் இருளில் மூழ்கடித்து உலகிலேயே மிகப்பெரிய மின்துண்டிப்பு எனும் நற்ப்பெயரையும் இந்த தேசத்துக்கு வாங்கி தந்த சுஷில் குமார் ஷிண்டேவுக்கு உள்துறை அமைச்சகப் பொறுப்பு என் காங்கிரஸ் அமைச்சர்களின் திறமை நீண்டு கொண்டே போகிறது.

எனவே இருக்கும் இடத்தை பொறுத்துதான் பதவிகளும், பரிசுகளும் கிடைக்கும் , இருக்கும் இடம் தவறென்றால் , என்னதான் நல்லவராயினும் , தேசநலனில் அக்கறை உள்ளவராயினும் . பரிசும் பதவிகளும் வேறு விதமாகத்தான் இருக்கும்

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.