வீர்பத்திர  சிங்கும் அவரது அதிசய வைக்கும் விவசாய வருமானமும் இந்த மாதத் தொடக்கத்தில் ஊடகங்கள் சிலவற்றில் மும்பையைச் சேர்ந்த நிறுவனமான இஸ்பாட் இன்டஸ்ட்ரீஸில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகள் மற்றும் பறிமுதல்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தன. அரசுத்துறைகளில் பணிபுரியும் பல்வேறு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பணம்

தொடர்பான ஆவணங்களும் இத்தேடுதல் வேட்டையில் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதில் குத்துமதிப்பாக 2.28 கோடி ரூபாய்கள் விபிஎஸ் என்ற ஒருவருக்குக் கொடுக்கப்பட்டதாகவும் கணக்கு உள்ளது. ஸ்ரீ வீர்பத்ர சிங், அந்த கணக்கு டைரிகளில் குறிப்பிடப்படும் விபிஎஸ் தான் அல்ல என்று மறுத்துள்ளார். இந்த விவகாரத்தை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்து வருவதாக ஊடகங்களிலிருந்து தெரியவருகின்றன.

மேற்கண்ட விஷயங்களுடன் தொடர்பு இல்லாத சில நிகழ்ச்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன: அதில் ஒருவர் திரு ஆனந்த் சவுஹான், சிம்லாவில் வசித்து வருபவர். அவர் பஞ்பாப் நேசனல் வங்கியில் தனது கணக்கை வைத்திருந்தார். அவரது கணக்கு எண்.524185. அதில் 20082009,20092010 மற்றும் 20102011 ஆண்டுகளில் பெரும் தொகைகள் சேர்ப்பிக்கப்படுகின்றன. இதன் மொத்த மதிப்பு ஐந்து கோடி ரூபாயாக இருக்கலாம். இந்த ஆனந்த் சவுகான், தனது கணக்கிலிருந்து பல்வேறு எல்ஐசி பாலிசிகளுக்கு காசோலைகளாக ப்ரிமியம் தொகையை செலுத்துகிறார். அந்த பாலிசிதாரர்கள் திரு. வீர்பத்ர சிங், அவரது மனைவி பிரதிபா சிங் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள்தான். தேர்தல் ஆணையத்தில் தனது சொத்து விவரங்களை ஒப்படைக்கும் போது திரு வீர்பத்ர சிங் இந்த பாலிசி விவரங்களையும் கொடுத்துள்ளார்.

சிம்லாவில் இருக்கும் ஆனந்த் சவுகான் என்பவர் ஏன் வீர்பத்ர சிங்கின் பெயரிலும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் எல்ஐசி பாலிசிகளை வாங்கவேண்டும் என்பதே பதில்தெரியாத கேள்வியாக உள்ளது. வெறும் எல்ஐசி முகவராக இருக்கும் ஒருவருக்கு எப்படி இவ்வளவு தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர முடியும். ஆனந்த் சவுகான் இதற்குப் பிறகு வருமான வரித் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளார். அவரும் ஒரு அறிக்கையைக் கொடுத்துள்ளார். இந்த அறிக்கையை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை வீர்பத்ர சிங்கையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரும் என்று தெரிகிறது.

வீர்பத்ர சிங்குக்கு அவரது ஆப்பிள்தோட்டத்திலிருந்து வந்த வேளாண்மை வருவாய் 31.3.2008,31.03.2009 மற்றும் 31.03.2010 ஆகிய தேதிகளில் மூன்று ஆண்டுகளுக்கு தனது விவசாய வருவாய் என்று முறையே 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய், 15 லட்சம் மற்றும் 25 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.( 3.6 லட்ச ரூபாய் செலவுக்கு கழிக்கப்பட்டுள்ளது) விதர்பா சிங்கின் ஆப்பிள் தோட்டம் 17.06.2008 தேதியிட்டு திரு. பிசாம்பர் தாசுக்கு ஒப்பந்தத்த குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்காக அவர் வீர்பத்ர சிங்குக்கு கொடுத்த தொகை 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மூன்றாண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட தொகையாகும். மிச்ச வருவாய் பிசாம்பர் தாசுக்குச் செல்லும். விர்பத்ர சிங்கின் ஆப்பிள் தோட்டத்திலிருந்து அவர் தெரிவித்த விவரங்களின் படியே பார்த்தாலும் வருவாய் சில லட்ச ரூபாய்கள் தான் கிடைத்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆனந்த் சவுகானுக்கு 5 கோடி ரூபாய் எப்படிகிடைத்தது? அவரால் வீர்பத்ர சிங்குக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எல்ஐசி பாலிசிகள் எப்படி போடமுடிந்தது?

வீர்பத்ர சிங்கின் வருவாயில் திடீர் ஏற்றம் கையும் களவுமாகப் பிடிபட்ட வீர்பத்ர  சிங்கை நிலையில் விதர்பாசிங்கும் ஆனந்த சவுகானும் முன்தேதியிட்ட ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளனர். அதன் தேதி 15.06.2008. இந்த ஒப்பந்தப்படி ஆனந்த் சவுகான், ராஜா வீர்பத்ர சிங்கின் ஆப்பிள் தோட்டத்தை ஆனந்த் சவுகான் நிர்வகிப்பதாக இந்த ஒப்பந்தம் உள்ளது. அதன் வருவாயை வங்கியில் போட்டு அதை எல்ஐசி பாலிசிகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டுவகைகளில் போலியானது ஏனெனில்: வீர்பத்ர சிங்கின் ஆப்பிள்தோட்டத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை ஏற்கனவே பிசாம்பர் தாசின் பெயரில் 17.06.2008 தேதியிட்டு உள்ளது. அதற்கு இரண்டு நாட்கள் முன்பான தேதியில் இன்னொருவருக்கு அதே தோட்டத்தை எப்படி ஒப்பந்தம் செய்யமுடியும். 3200 மரங்கள் கொடுக்கும் வருவாய் ராஜா வீர்பத்திர சிங்கின் வருமானவரித் தாக்கல் விவரங்களிலும் பிசாம்பர் தாசிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்திலும் உள்ளது. இந்நிலையில் திடீரென்று அந்த வருவாயை பல ஆயிரம் சதவகிதம் வீங்கவைக்க முடியாது.

பதற்றத்தில் செய்த கடைசி காரியம் வீர்பத்திர சிங் மீண்டும் தனது வருமானவரி வருவாயை தாக்கல் இந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி செய்துள்ளார். ( இந்த ஆண்டில் ஏற்கனவே சில லட்ச ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறியுள்ளார்). அதில் முன்பு குறிப்பிட்ட மூன்று ஆண்டுகளுக்கு ஆனந்த் சவுகான் வாயிலாக வந்த விவசாய வருவாய் என்று முறையே 2 கோடியே 21 லட்சத்து 35 ஆயிரம், 2 கோடியே 80 லட்சத்து 92 ஆயிரத்து 500, ஒரு கோடியே 55 லட்சம் என்று தனது வருவாயைக் குறிப்பிட்டுள்ளார். திடீரென்று வீரபத்திர சிங் தனது வருவாயை 6.15 கோடிக்கு உயர்த்திக்காட்டியுள்ளார். இது அதிசயமா ஏமாற்றா என்று தெரியவில்லை. முடிவு

வீர்பத்திர சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நலனை முன்வைத்து பெரிய அளவில் வருமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது மேலே கண்ட விவரங்களிலிருந்து நன்கு தெரியவருகிறது. அந்தப் பணம்தான் ஆனந்த் சவுகானின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டு பின்பு வீர்பத்திர சிங்கின் குடும்பத்தினருக்கும் அவருக்கும் எல்ஐசி பாலிசி ப்ரீமியம்களாக  மாறியுள்ளன. வீர்பத்திர சிங்கின் வருவாயை உயர்த்திக்கொட்டுவதற்காகவே முன்தேதியிட்ட ஒப்பந்த விவரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. இது வெறுமனே ஊழல் தொடர்பான குற்றம்  மட்டுமல்ல. இந்தப் பிரச்னை மோசடிக்குற்றம் தொடர்பானதும் கூட. வீர்பத்திரசிங்கின் இந்த பிரமாண்ட மோசடிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கோருகிறது

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.