மத்திய  அரசை கண்டித்து  21ம் தேதி, நாடு தழுவிய   போராட்டம் சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட , மத்திய அரசின் பொறுப்பற்றசெயலை கண்டித்து, வரும், 21ம் தேதி, நாடுதழுவிய அளவில், போராட்டம் நடை பெறும் என்று , பா.ஜ.க அறிவித்துள்ளது.

இது குறித்து பாரதிய ஜனதா துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி கூறியதாவது: விலைவாசி உயர்வை கட்டுப் படுத்துவதிலும் ஊழல் , மோசடிகளை தடுப்பதிலும், மத்திய அரசு மெத்தனமாக செயல் படுகிறது. அத்துடன், 5 கோடிக்கும் அதிகமான , சிறு வணிகர்களை பாதிக்கும்வகையில், சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய_முதலீட்டை அனுமதிக்கும் முடிவையும் எடுத்துள்ளது. மத்திய அரசின், இந்த பொறுப்பற்ற செயல்பாட்டை கண்டித்து, வரும், 21ம் தேதி, நாடுதழுவிய அளவில், பாரதிய ஜனதா போராட்டம் நடத்துகிறது.

மாவட்ட தலை நகரங்களில், ஆர்ப்பாட்டங்கள், தர்ணாபோராட்டங்கள், பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்றவை நடை பெறும். மாநில தலை நகரங்களில் நடக்கும், இந்த போராட்டங்களில், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் பங்கேற்பர். அருணாச்சல பிரதேசம் இட்டா நகரில் நடைபெறும் போராட்டத்தில், கட்சியின் தலைவர், நிதின்கட்காரி பங்கேற்பார் என்று நக்வி கூறினார்.

Tags:

Leave a Reply