சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே  காலமானார் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே இன்று காலமானார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த அவர்,

கடந்த புதன்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. மூச்சு விடுவதில் சிரமம், இருதய கோளறு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்ட அவருக்கு, அவரின் வீட்டில் உள்ள , அவரது தனியறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து , பல்வேறு கட்சி தலைவர்களும் , நடிகர்களும் மும்பை பந்த்ராவில் இருக்கும் அவர் வீட்டுக்குசென்று உடல் நலம் விசாரித்தனர். தொண்டர்களும் திரண்டனர். இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் நிலவியது.

இந்நிலையில் இன்று . மாலை 3.30 மணியளவில் அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்தது. இதனால் அவரது வீட்டுவாசலில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு சிலநிமிடங்களில் அவர் மரணம் அடைந்ததை டாக்டர்கள் உறுதிசெய்தனர்.

இந்த செய்தியை கேள்வி பட்டு வெளியில் இருந்த சிவசேனா கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் . கண்ணீர் வடித்துகதறி அழுதனர். பால்தாக்கரே மரணம் அடைந்த செய்திகேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் அவரது வீட்டுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.