தேசிய ஹீரோ ஸ்ரீ  சர்பானந்தா  ஸோனோவால்   அசாம் மாநில பாஜக தலைவராக நியமிக்கபட்டுள்ளர் . பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான ஸ்ரீ நிதின் கட்காரி , தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாக உறுப்பினராக இருக்கும் ஸ்ரீ சர்பானந்தா ஸோனோவாலை அசாம் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக நியமித்துள்ளார்.

தற்போது அசாம் மாநிலப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து வெளியேறும் ஸ்ரீ ரஞ்சித் தத்தா, தனது கடமைகளையும் பொறுப்புகளையும் திறம்பட வகித்து வந்தவர், உடல் நலக் குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறார்.

அசாம் மாநிலத்தின் மோரன் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஸ்ரீ சர்பானந்தா சோனோவால் அசாம் மாநிலத்தின் திபுருகர்த் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. ஆக இருந்த போது இவர் அசாம் கன பரிஷத் (ஏ.ஜி.பி.) உறுப்பினராக இருந்தார். ஆல் அஸ்ஸாம் ஸ்டூடன்ட் யூனியனின் (ஏ.ஏ.எஸ்.யு.) தலைவராகவும் இருந்தார். ஏழு வட கிழக்கு மாநிலங்களின் அனைத்து வட கிழக்கு மாணவர்கள் அமைப்பின் (என்.இ.எஸ்.ஓ.) தலைவராகவும் இருந்துள்ளார்.

1983ஆம் ஆண்டில் இந்திரா காந்தி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட சட்ட விரோதமாக நாட்டில் குடியேறுபவர்களைத் தீர்மானிப்பதற்கான நடுவர் மன்றம் சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். மூன்று நீதிபதிகள் பெஞ்ச் கொண்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து 2005ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டம் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களைக் கண்டறிந்து நாடுகடத்துவதற்கு இந்த 1983ஆம் ஆண்டு சட்டம் ஒரு தடையாக உள்ளது என்று கூறி இந்தச் சட்டம் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரத்து செய்யப்பட்டது.

ஐ.எம்.டி.டி. சட்டத்தை இந்திய உச்ச நீதி மன்றம் ரத்து செய்த பின், அசாம் மக்களின் நலனுக்கானப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்களிப்புக்காக ஆல் அஸ்ஸாம் ஸ்டூடன்ட் யூனியன், திரு சர்பானந்தா சோனோவாலுக்கு ‘ஜாத்ய நாயக்” (தேசிய ஹீரோ) என்ற பட்டத்தை வழங்கியது.

அசாம் மாநிலத்தின் மிகச் சிறந்த அரசியல்வாதி என்ற விருதை 2005ஆம் ஆண்டு தொலைக்காட்சி ஊடகமும் “ஸ்ரேஷ்ட அக்ஸோமியா (மிகச் சிறந்த அஸ்ஸாமியர்)” என்ற விருதை 2007ஆம் ஆண்டில் ஒரு பத்திரிகையும் அவருக்கு அளித்தன.

இவரது திறன்களை நன்றாக உணர்ந்து கொண்ட பிறகே அவருக்கு இந்தப் பொறுப்பை அளித்துள்ளோம். நேர்மையான, அர்ப்பண உணர்வுள்ள, கடுமையாக உழைக்கும் கட்சித் தொண்டராக இத்தனை வருடங்களாக இருந்து வந்த இவருக்கு ஒட்டு மொத்த கட்சியின் சார்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.