காங்கிரஸ் கட்சி மீது தொடர்ச்சியாக ஊழல் புகார் அம்புகள் பாய, அக்கட்சி தனது இறுதி ஊர்வலத்திற்கு தயாராகி வருகிறது. ஆனால், மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது எழுந்துள்ள அதிர்ப்தி அலையை பா.ஜ.க-வினால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என்பது வருத்தத்திற்குறியது.

2ஜி, காமண்வேல்த், ஆதர்ஷ், நிலக்கரி போன்ற ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்த பெருமை நிச்சயமாக பாஜகவையே சாரும். ஆனால், பாஜகவின் ஒரு சில முக்கிய பிரமுகர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கள், கர்நாடக பாஜகவில் நிலை போன்ற பிரச்சனைகள், மொத்த பாஜகவின் மீதும் வைத்திருந்த நம்பிக்கையில் குத்தப்பட்ட கரும்புள்ளி தான்.

ஆனால், 100% காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, பாஜக தலைமையால் மட்டுமே, ஒரு நிலையான, திறமையான ஒரு அரசை நிறுவகிக்க முடியும்.

பாஜகவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் கூட, நரேந்திர மோடி அவர்களை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தும் பட்சத்தில், அவை அனைத்தும் தேர்தல் களத்தில் மறைந்து போய், பா.ஜ.கவுக்கு நல்ல வாக்குகளை வாங்கி தந்து, ஆட்சி அமைக்க நல்ல அடித்தளமிடும்.

இப்படி பல்வெறு பிரச்சனைகளுக்கு மத்தியில், சீனிலே இல்லாத CPI(M) மூன்றாவது அணி மூலம் ஆட்சியை பிடிக்க நினைப்பது தான் வேடிக்கை. காங்கிரஸ் மீதும் ஊழல் புகார்கள் குமிய, பாஜக மீதும் ஊழல் புகார்கள் வர, இத்தருணத்தை தனக்கு சாதகமாக மாற்ற முடியுமா என்று CPI(M) முனைந்துள்ளது.

CPI(M) என்ற ஒரு கட்சி உள்ளதே, பாரதத்தில் பல மாநில மக்களுக்கும் தெரியாது! கேரளா, திரிபுரா, வங்கம் ஆகிய மூன்று மாநிலத்தில் மட்டும் தான் அக்கட்சி காலூன்றி உள்ளது. அதிலும், கேரள மற்றும் வங்கத்தில் அக்கட்சி தள்ளாடி தத்தளித்து வருகிறது.

545 பாராளமன்ற உறுப்பினர்களை கொண்ட நமது பாராளமன்றத்தில், வெறும் 16 உறுப்பினர்களையே கொண்ட CPI(M) மத்திய அதிகாரத்தில் வர துடிப்பது, சிறு குழந்தை மிட்டாய்காக அடம்பிடிப்பதை போல உள்ளது.

அதே சமயம், CPI(M) ஒன்றும் முட்டாள்கள் அல்ல. CPI(M)ஆல், 2014ம் ஆண்டு தேர்தல் அல்ல, 3014ம் ஆண்டு தேர்தல் நடந்தால் கூட CPI(M)ஆல் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். அதனால் தான், ஒவ்வொரு பாராளமன்ற தேர்தலின் போதும் "மூன்றாம் அணி" என்று பூச்சாண்டி காட்டுகின்றனர்.

உதிரிகள் சேர்ந்து அமைக்கும் மூன்றாம் அணியால், ஒரு நிலையான அரசை மத்தியில் தர முடியாது என்பது தான் கடந்த கால வரலாறு நமக்கு கற்று தந்த பாடம். இது ஒரு புறமிருக்க, இந்த CPIMஐ பொறுத்தவரை "மூன்றாவது அணி" என்றால் என்ன?

காங்கிரஸ், பாஜக  எல்லாம் ஊழல் கட்சிகளாம். ஆக இதற்கு மாற்றாக, CPIM தலைமையில் பல மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு அணியை உருவாக்குவார்களாம். அதற்கு பெயர் தான் மூன்றாவது அணியாம்!

மாநில கட்சிகள் என்றால் எப்படிபட்ட கட்சிகள் தெரியுமா? "குண்டாஸ் மற்றும் ஊழல்" ஆகிய வார்த்தைகளுக்கு கூட அர்த்தம் தெரியாத முலாயமின் சமாஜ்வாதி கட்சி!, "அரசு பணத்தில் தனக்கு தானே சிலை வைக்க தெரியாத", தன்னலமற்ற மாயவதியின் பகுஜன் சமாஜ்!, "மாடுகளுக்கு உணவு அளித்ததற்காக ஆட்சியையே இழந்த" லாலு!, "சாதி வாசனையே இல்லாத" பாஸ்வான்!, "பிரகாசமான அரசியல் வருங்காலம்" உள்ள சந்திரபாபு நாயூடு! போன்றவர்களின் திறமையான, அப்பழுக்கற்ற கட்சிகளை எல்லாம் ஒன்றினைத்து, ஊழல் அற்ற, திறமையான, சிறந்த ஆட்சியை, நமது செங்கொடி தோழர்கள் நம் நாட்டிற்கு தருவார்களாம்! ஒருவேளை ஆட்சியின் நலன் கருதி, "ஊழல் மற்றும் குடும்ப வாசனையே இல்லாத", திமுகவை கூட இவ்ணியில் இணைக்க வாய்ப்புள்ளது!

மாநில காட்சிகள் மீதுள்ள குற்றச்சாட்டுகளைக் கூட விட்டுவிடலாம். ஆனால், ஊழலைக் காரணம் காட்டி, காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு அணியை உருவாக்க துடிக்கும் CPIM, ஊழலுக்கு அப்பார்பட்டு இருக்க வேண்டாமா? அவர்களின் கை சுத்தமா? சில சமீபத்திய நிகழ்வுகள் CPIMயின் ஊழல் முகங்களையே காட்டுகிறது.

அது சரி. அக்கட்சியின் மனதிலேயே சுத்தமில்லை. அப்படியிருக்க, கை எப்படி சுத்தமாக இருக்கும்? 1962_ல், சீனா நம் தேசத்தின் மீது போர் தோடுத்த போது, சீனாவின் அடிவருடிகளாக, தனது தாய்கழகமான CPIல் இருந்து பிரிந்து சென்றவர்கள் தானே இந்த CPIM கட்சியினர்.

சுத்தமான ஆட்சியை வழங்க முடியாததால் தான், அக்கட்சி கடந்த தேர்தலின் போது படுதோல்வி அடைந்து, கேரளத்திலும், வங்கத்திலும் தங்கள் அட்சியை இழந்தார்கள். அப்படியிருக்க இவர்களா சுத்தமான ஆட்சியை மத்தியில் வழங்க போகிறார்கள்?

எடியூரப்பா மீது "முறை தவறி நிலம் ஒதுக்கியதாக" புகார் வந்த போது, நமது மீடியாக்கள் எல்லாம் கத்தோ, கத்து என்று கத்தியது. Flash News எல்லாம் எடி, எடி என்று எடியூரப்பா மயமாகவே தென்பட்டது.

ஆனால், சமீபத்தில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கர்சர்கார்டில் உள்ள நிலங்களை முறைகேடாக தனது உறவினரான T.K .சோமன் என்பவருக்கு ஒதுக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த போது, பெரும்பாலான நம் மீடியாக்கள் FEVI QUICK போட்டது போல தங்கள் வாயை இருக்க மூடிக்கொண்டனர்.

இதனிடயில், அச்சுதானந்தனின் மகன் அருண் குமார், சட்டவிரோதமாக லாட்டரி கடத்தும் கும்பலுடன் வைத்துள்ள ரகசிய தொடர்புகளும் கசிந்துள்ளது. தாய் 8 அடி பாய, குட்டி 16 அடி பாயுமாம். ஆனால் இங்கு, தந்தை 16 அடி பாய, குட்டி 66 அடி பாய்யும் போல!

CPIMயின் முக்கிய தலைவர்களுக்கும், இந்த லாட்டரி கும்பலுக்கும் உள்ள தொடர்பை பிரதிபலிக்கும் வகையில், பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான, லாட்டரியின் முடிசூடா மன்னன் மாட்டின், இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு(Bondsஆக) CPIMயின் கட்சி பத்திரிக்கையான தேசபிமணியில் (Deshabhimani) நிரந்தர வைப்பு தொகையாக செலுத்தியுள்ளார். கார்பரேட் மற்றும் பெருமுதலாளித்துவத்தை எதிர்பதாக கூறும் CPIMயின் லட்சணம் இது தான்.

CPIMயை பொருத்தவரை, கட்சியின் அதிகார மையம் என்றால், அது போலிட் பியூரோ தான். ஆனால், இது எவ்வளவு போல்யூட் ஆகியுள்ளது என்பதற்கு, விஜயன் போன்ற CPIM தலைவர்களே சாட்சி.

கேரள CPIMயை பொருத்த வரை, அச்சுதானந்தன் கோஷ்டிக்கு எதிர் கோஷ்டி என்றால், அது விஜயன் கோஷ்டி தான். கேரள மாநில அதிகார மையம் யார் என்பதில், விஜயனுக்கும் அச்சுதானந்தனுக்குமிடையே அடிக்கடி பனிப்போர் நடப்பது இயல்பான விஷ்யம். அதே சமயம், விஜயன் என்பவர் CPIMயின் தவிர்க்க முடியாத முக்கிய தலைவர், கேரள CPIMயின் பொது செயலளர் மற்றும் போலிட் பியூரோ உறுப்பினரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

1997-ல் மின் துறை அமைச்சராக இருந்த விஜயன், நன்றாக ஓடிக் கொண்டிருந்த நீர் மின் நிலையங்களை புதுப்பிப்பதாக கூறி, அப்பணியை மேற்கொள்ள, கன்னடாவைச்(Canada) சார்ந்த லாவ்லின் என்ற நிறுவனத்துடன் ஒப்பத்தம் செய்தார். இதில் கிட்டத்தட்ட 374 கோடிகள் ஊழல் நடந்துள்ளது. (2G ஊழலைப்போன்று தெரிந்தே அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினர்.) இவ்வழக்கு விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இவ்வழக்கில் விஜயன் 7வது குற்றவாளியாக உள்ளார் என்பது கவனிக்கதக்கது. ஆனால், விஜயனை கட்சியை விட்டு வெளியேற்றாமல், அவர் மீது வலுவான நடவடிக்கை மேற்கொள்ளாமல், ஊழல் செய்ததற்காகவே, அவருக்கு மாநில பொது செயலளர் பதவி வழங்கி, CPIM கட்சி அழகு பார்க்கிறது.

ஆதலால், கட்காரியை பதவி விலக கோரும் CPIM தலைவர்கள், தங்கள் முகத்தை முதலில் கண்ணாடியில் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

நன்றி; திகம்பரி

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.