குஜராத் தேர்தல்   84 பெயர்களை கொண்ட முதல்பட்டியல் வெளியீடு குஜராத் மாநில சட்ட சபைக்கு வரும் டிசம்பர் மாதம் இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது 182 சட்ட சபை தொகுதிகளில் 84 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல்பட்டியலை நரேந்திரமோடி வெளியிட்டார்.

இதில் முதல்வர் நரேந்திரமோடி மணிநகர் தொகுதியிலும், மாநில பாஜக தலைவர் ஆர்சி.பால்து ஜாம் நகரின் கிராமப்புறதொகுதியில் போட்டியிடுகிறார். அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களிள 10 பேர் பெண் அதில் 6 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். 14 பேர் பழங்குடியினர்.

ஏற்கனவே எம்எல்ஏ.வாக இருந்த 7 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை . தற்போதைய எம்எல்ஏ.க்கள் மீது வந்திருக்கும் குற்றச் சாட்டுகளை பொறுத்து அவர்களுக்கு திரும்பவும் சீட்டு வழங்கப் போவதில்லை பாஜக ஏற்க்கனவே தெரிவித்திருந்தது . மற்ற வேட்பாளர் களின் பட்டியல் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.