குஜராத்தில்   எம்.பி.,க்களை, எம்.எல். ஏ.,வாக ஆக்கும் காங்கிரஸ்சின் விசித்திர முயற்ச்சி இந்திய அரசியலில் ஒரு விசித்திரம் பொதுவாக எம்.எல்.ஏ.,க்களாக இருப்பவர்களைத்தான், எம்.பி.,யாக நிறுத்துவார்கள் . ஆனால் குஜராத் காங்கிரஸ்சோ எம்.பி.,க்களை, எம்.எல். ஏ.,வாக ஆக்கும் விசித்திர முயற்ச்சியை மேற்கொண்டுள்ளது.

குஜராத்தை பொறுத்தவரை மோடியின் வெற்றி உறுதி செய்யபட்ட ஒன்று , ஆனால் மாநில ஆட்சியை, 1995ல், பாரதிய ஜனதாவிடம் தொலைத்த காங்கிரஸ், எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலேயே உள்ளது, இதன் ஒரு பகுதியகதான் பித்தம் ஓவராக தலையில் ஏறி! குஜராத் மாநில குழந்தைகள் ஊட்டச் சத்து பற்றாக்குறையால் அவமதிப்படுகிறார்கள் என்று பொய் குற்றச்சாட்டை சுமத்தி, ஏதோ ரொம்ப அறிவுபூர்வமாக செயல்படுவதை போன்று 'இலங்கை அகதிகள்' படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்து இப்போது கையும்காலுமாக பிடிக்கப்பட்டு முழித்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு நல்ல விஷயம் இலங்கை தமிழனின் நிலையை குஜராத் மக்கள் அறிந்து கொண்டிருப்பார்கள் . இதற்க்கு காங்கிரஷ்தான் காரணம் என்பதை நன்கு தெரிந்தும் கொண்டிருப்பார்கள்.

இப்படி தப்பையும் தப்பு தப்பாக செய்துகொண்டிருக்கும் நிலையில் , இப்போது எம்.பி.,க்கள் மூன்று பேரை, காங்கிரஸ் கட்சி, சட்ட சபை தேர்தலில் களம் இறக்கி விட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு எம்.பி., ஏழு சட்ட சபை தொகுதியின் ஆதரவைபெற்றவர். எம்பி.,யை சட்ட சபை தேர்தலில் நிறுத்துவதன் மூலமாக , அவருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று புதிய (தப்பு) கணக்கை போட்டுள்ளது ,

இதன் படி ராஜ்கோட் லோக்சபா தொகுதி எம்பி.,யான, குன் வார்ஜி பவாஜியா போடாட் சட்டசபை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். சுரேந்திரநகர் தொகுதியிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட, காங்கிரஸ் எம்.பி., சோமாபாய்ஜி படேல், லிம்பாடி சட்டசபை தொகுதியில், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். சோதனை சாவடியில், துப்பாக்கியை காட்டி மிரட்டி தனது செல்வாக்கை காட்டிய போர்பந்தர் லோக்சபாதொகுதி எம்.பி., வித்தால் ராடாடியா, தோராஜி சட்ட சபை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இதை காங்கிரஷில் தகுதி வாய்ந்த வேட்ப்பாளர்கள் இல்லை என்பதாக எடுத்து கொள்வதா?, அல்லது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றிபெற போவதில்லை ஏதோ எம்.எல்.ஏ., பதவி கிடைத்தால் போதும் என்ற எம்.பி.,க்களின் மனோநிலையாக எடுத்து கொள்வதா ?, எது எப்படியோ எம்.பி.,க்களை எம்.எல்.ஏ.,க்களாக ஆக்குவது என முடிவு செய்தாகிவிட்டது , காங்கிரஷில் மிச்சம் சொச்சம் இருக்கும் எம்.பி.,.களையும் , வாய் பேச்சு அமைச்சர்களையும் குஜராத்தில் களம் இறக்கி விட வேண்டியது தானே?

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.