இந்திய முன்னாள் பிரதமர்  ஐகே. குஜரால் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார் இந்திய முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜரால் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93.

நுரையீரல் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐகே. குஜரால், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்

சிகிச்சைபெற்று வந்தார். குஜராலுக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள், கைவிரித்துவிட்ட நிலையில் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு அவரது உயிர்பிரிந்தது.

திறமையான அரசியல் வாதியாகத் திகழ்ந்து, அரசியலில் தனக்கென ஒருஇடத்தைப் பிடித்தவர் மறைந்து முன்னாள் பிரதமர் ஐகே. குஜரால். 1919ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிறந்த இந்தர் குமார் குஜரால், இந்தியாவின் 12வது பிரதமராக ஓராண்டு காலம் பதவி வகித்தவர்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1942ஆம் ஆண்டு “இந்தியாவை விட்டு வெளியேறு” இயக்கப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறைச் சென்றவர் குஜரால். 1975ஆம் ஆண்டு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக குஜரால் பதவியேற்றார்.

இதற்கிடையே 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஜரால், ஜனதா தளக் கட்சியில் சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு பஞ்சாப் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரராகவும், அரசியல் வாதியாகவும், சிறந்த பிரதமராகவும் தனது பணியினை சிறப்பாக செயலாற்றியவர் ஐ.கே. குஜரால். இரண்டு முறை இந்தியாவின் அயலுறவுத் துறை அமைச்சராக இருந்து பல்வேறு அயல்நாட்டுடனான பிரச்னைகளை சுமூகமாக முடித்தவர்.

1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எச்.டி. தேவேகௌடா அரசுக்கு அளித்த வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ள முடிவு எடுத்த போது பிரதமர் பதவிக்கு ஐ.கே. குஜரால் தேர்வு செய்யப்பட்டார். சரியாக ஓராண்டுகள் குஜரால் பிரதமர் பதவியை வகித்தார். அந்த காலக்கட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை குஜரால் திறமையாக சமாளித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.