அமெரிக்காவே   சில்லரை வணிக முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள நிலையில்  நமக்கு எதற்கு அன்னிய முதலீடு?. பெரிய நிறுவனங்கள் கையில் சில்லரை வர்த்தகத் துறை ஒப்படைக்க படுவதால் வளர்ச்சி எதுவும்ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தில் மேலும் இது குறித்து அவர் பேசியதாவது ; விவசாயிகள் இதில் பயன அடைவார்கள் என காங்கிரஸ் கூறுகிறது இது ஒருபொய் இதற்கு ஆதாரங்களே இல்லை. இன்னும்கேடுதான் ஏற்படும் , அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா தனது டுவிட்டரில் சில்லரை வர்த்தகம் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கமாம் என கூறுகிறார். எனவே அமெரிக்கா போன்ற மிகப் பெரிய பொருளாதாரமே சில்லரை வணிகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள நிலையில் நமக்கு எதற்கு அன்னிய முதலீடு?.

நமது பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்த பொருளாதாரம் ஏன் அதனை கெடுக்க வேண்டும்? , ஒபாமாவே சில்லரை வர்த்தகர்களிடமிருந்து வாரம் ஒரு முறையாவது பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தி வருகிறார் .

“ஒரு முட்டாள் தனது அனுபவத்தின் மூலம் பாடங்களை கற்றுக் கொள்வார். ஒருபுத்திசாலி பிறரிடமிருந்து பாடம் கற்று கொள்வார். நான் பிற நாட்டு உதாரணங்களை முன்வைக்கிறேன். அவர்களது அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.

மெக்டோனல்ட் என்ற மிக பெரிய செயின் உருளைக் கிழங்குகளை மற்ற நாட்டிலிருந்து இறக்குமதி செய்த போது விவசாயிகள் தங்களது உருளை கிழங்குகளை தெருவில் வீசவேண்டிய நிலை ஏற்பட்டது ஆகவே பெரிய அங்காடிகள் நமது விவசாயிகளிடம் இருந்துதான் பெறுவார்கள் என்பதற்கான எந்தவித உத்திரவாதமும் கிடையாது .

தரகர்களை ஒழித்துவிடுவோம் என்கிறார்கள் . ஆனால் இந்தியாவில்கூட எல்லா சமயங்களிலும் தரகர்கள் ஆதிக்கம் உள்ளது என கூறமுடியாது. உதாரணமாக சர்க்கரை உற்ப்த்தித்துறையில் கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுடன் நேரடி வர்த்தகம் செய்துவருகின்றனர். என்றார் 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.