வங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம்  வங்கப் பிரிவினையை எதிர்த்து மக்கள் வங்கம் முழுவதும் போராடினார்கள், பல போராட்ட இயக்கங்கள் தோன்றின, அவற்றில் மிகமிக முக்கியமான இயக்கம் "சுதேசி இயக்கம்". வங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம் சீக்கிரத்திலேயே நாடெங்கிலும் பரவியது,

சுதேசி இயக்கத்தின் கோஷமாக "வந்தேமாதரம்" விளங்கியது,

அந்நியத்துணி, அன்னியப்பொருள் பஹிஷ்காரம் கீழ்க்கண்ட விதமாக பின்பற்ற வேண்டுமென்று வங்கத்தலைவர்கள் அறிக்கை விடுத்தனர்,

1. ஆங்கிலேயர்களின் துணி, உப்பு, சர்க்கரை, ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது,

2. ஆங்கிலத்தில் பேசுவது கூடாது.

3. அரசின் உயர்ந்த கவுரவ பதவிகள், சட்டமன்ற, நகர மன்ற உறுப்பினர்கள் பதவிகளை உதறி எறிவது,

4. இங்கிலாந்து பொருட்களை பயன்படுத்துவோரை சமூகரீதியாக பஹிஷ்கரிப்பது,

அ. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது கூடாது.

ஆ. அவர்கள் வீடுகளில் திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது,

இ. அவர்களிடம் இருந்து எந்தப் பொருட்களையும் வாங்குவதோ, அவர்களுக்கு எந்தப் பொருட்களையும் விற்பதோ கூடாது,

ஈ சிறுவர் , சிறுமியர் அவர்களது வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடப் போகக்கூடாது,

அன்னியப் பொருட்களை வாங்குவோரை மற்றவர்கள் கேலி செய்யத் தொடங்கினர், வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவோரை மற்றவர்கள் கேலி செய்யவும் தொடங்கினர்,

வங்கம் முழுவதும் அன்னியப் பொருட்களை தீயிலிட்டுக் கொழுத்தி "வந்தேமாதரம் , பாரதமாதா கீ ஜெய்" என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன,

இந்த சுதேசி இயக்கம் மற்ற மாநிலங்களுக்கும் வேகமாகப் பரவியது,

வங்க மாநிலத்தில் வெளிநாட்டு பொருட்களை விற்கும் வணிகர்களுக்கு சுதேசி இயக்கத்தினர் பெருந்தொல்லைகளைத் தந்தனர்,

நதியா எனும் ஊரில் சந்த்ரகாந்தபால் என்பவர் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யபட்ட சர்க்கரையைப் பயன்படுத்தியதற்காக அவருடைய வீட்டிற்க
ு பால்காரர்கள் பால் விற்க மறுத்தனர். காய்கறிக்காரர்கள் காய்கறி விற்க மறுத்தனர், கிர்ஷடோ எனும் நாவிதர் சந்த்ரகாந்தபால்-ற்கு முகஷவரம் செய்ததற்காக அவரது மைத்துனர் அவரை நையப்புடைத்துவிட்டார்,

வங்க மாநிலத்தில் சிறுவர் சிறுமியர் கூட சுதேசிய இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்,
வெளிநாட்டுத் துணிகளால் ஆன ஆடைகளை அணிந்து கொண்டு வரும் ஆசிரியர், பேராசிரியர் ஆகியோரை மாணவர்கள் விரட்டி விரட்டி அடித்தனர்,

வெளிநாட்டுத் தாள்களால் அச்சடித்த கேள்வித்தாள்களைக் கூட மாணவர்கள் கையால் தொட மறுத்தனர், எனவே பரிட்சைக் கேள்வித்தாள்களை சுதேசித்தாள்களில் அச்சடிக்க வேண்டி வந்தது,

வங்க மாநிலத்தில் ஆண்களை விட பெண்கள் சுதேசிய இயக்கத்தில்
தீவிராமாக பங்காற்றினர்,
ஒரு வீட்டில் ஐந்து வயதுப்பெண் குழந்தைக்கு அவளது உறவினர்கள் ஒரு ஜோடி வெளிநாட்டுக் காலணிகளை அன்பளிப்பாகத் தந்தனர், அவற்றை ஏற்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் தூக்கி எரிந்து விட்டாள்.

மற்றொரு வீட்டில் ஒரு சிறுவயதுப் பெண் காய்ச்சலால் நினைவு தப்பி படுத்த படுக்கையாய் கிடந்தாள். அவள் உதடுகள் மட்டும் ஏதோ உச்சரித்த வண்ணம் இருந்தது,மருத்துவர் அதனை உன்னிப்பாக கேட்டும் போது " டாக்டர் எனக்கு வெளிநாட்டு மருந்து எதுவும் தந்துடாதிங்க,"என்பதுதான்.
டாக்டர் அசந்தே போனார்,

இது போன்று எத்தனை எத்தனையோ சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம்,

இந்த விஷயங்கள் தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல பரவத்தொடங்கியது,

தமிழ்நாட்டு செல்வந்தர்கள் ஆங்கிலேயர்களின் வங்கிகளை புறக்கணித்தனர், சென்னை வாசிகளான லார்ட் கோவிந்ததாஸ், கிருஷ்ணஸ்வாமி ஐயர் ஆகியோர் இந்தியன் வங்கியைத் தொடங்கினார்கள்,

கல்கத்தாவில் சுதேச வங்கி ஒன்று திறக்கப்பட்டது,

தொடரும……….,

நன்றி ;  ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.