ராமநாதபுரம் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதி. ஆன்மீகத்திலும் அறிவாற்றலிலும் மிகவும் திறமை மிக்கவராகவும், சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்ல வராகவும் திகழ்ந்தார். இதனால் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடக்க இருந்த உலக ஆன்மீக மாநாட்டில், இந்துமதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள மன்னருக்கு அழைப்பு வந்தது.

மன்னருக்கு இந்த அழைப்பு வந்த நேரத்தில்தான் விவேகானந்தர் இராமநாதபுரத்திற்கு வந்திருந்தார். விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகம் நட்பாகமாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி கொள்ளசெய்தது
.
விவேகானந்தரின் அறிவாற்றலும், ஆன்மீக சிந்தனையும் தெளிந்தபார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்கவைத்தது. அதனால் தம்மைவிட சிறந்தவரான விவேகானந்தரே சிகோகோ செல்வது சிறந்தது என மன்னர் முடிவுசெய்தார். தனது முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்து சொல்கிறேன் என சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடமிருந்து விடைபெற்றார்.

அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி, விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்க்கான ஏற்பாடுகளை செய்தார்.

1893 மே 31 அன்று அமெரிக்காவுக்கு புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள சிகாகோவை அடைந்தார். உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்பு 'மெட்காப்' எனும் நகரில் மகளிர் மன்றக்கூட்டத்தில் 'இந்தியப் பெண்கள்' எனும் தலைப்பில் விவேகானந்தருக்கு பேசும்வாய்ப்பு கிடைத்தது. இது தான் அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கம்.

பெண்கள்நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் விவேகானந்தருக்கு  இந்த முழக்கம் எழுச்சியோடு வரவேற்கப் பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம்பெண் விவேகானந்தரின் மீது அளவற்ற அன்புகொண்டாள். அதனால் அமெரிக்காவில்_விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம்பெண் உன்னிப்பாக கவனிக்கத்தொடங்கினாள்.

இந்த மாநாட்டிற்குப்பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொண்ட விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச்சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார். அங்கு பேசிய மேலை நாட்டு மதபோதகர் அனைவரும் "ஜென்டில் மேன்" என்று தங்களின் பேச்சைத்தொடங்கினர். இந்த வார்த்தை கூடியிருப் போருக்கும், சொற்பொழிவாளருக்கும் இடைவெளியை ஏற்படுத்துவதாக விவேகானந்தர் கருதினார் .

செப்டம்பர் 1-ம் தேதி விவேகானந்தர் பேசவேண்டிய முறைவந்தது. அவர் மேடையில் ஏறியதும், வேடிக்கை பொருளைப் பார்ப்பது போன்று அனைவரும் விவேகானந்தரைப் பார்த்தனர். அவரது காவி உடையும், தலைப் பாகையும் மேலை நாட்டவர்களுக்கு சிரிப்பை ஏற்ப்படுத்தியது.

கோர்ட், டை, பேண்ட் என்று மேடையில் பேசியவர்களின் மத்தியில் இப்படி ஒரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில்தோன்றியதும், கூடியிருந்தோரில் பலர் முகம்சுளித்தனர். இது பற்றி அவர் கவலைப்படவில்லை ; கண்டுகொள்ளவும் இல்லை.

சகோதர சகோதரிகளே!' என தமது சொற்பொழிவை கம்பீரமாக தொடங்கினார் விவேகானந்தர் . ஏளனம் செய்தவர்கள் வாய்மூடினர். ஆடையைக்கண்டு அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப் பட்டனர்.
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் விவேகானந்தர் தமது பேச்சைத்தொடங்கினார். அரங்கம் முழுவதம் உண்ணிப்பாக அவரையே கவனித்தது . அவர்பேச்சை மட்டுமே கேட்டது; அவர் சொல்வதை தங்கள் மனதில் பதிந்துகொண்டது. இந்த கூட்டத்தில தோற்றத்திலும், ஆடையிலும் அவர் தனித்துநின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்துவென்றார். பேசி முடித்த பிறகு அவரைத்தொடர்ந்து ஒருகூட்டமே வந்தது. அந்த கூட்டத்தில் 'மெட்காப்' நகர் மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப்பறிகொடுத்த அந்த இளம்பெண்ணும் இருந்தாள்.

இந்தமாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 உள்ளிட்ட மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது, "அளவுக்குமீறிய மதப் பற்று, மூட பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாகப் இறுகப்பற்றியுள்ளன; வன் முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து உலகை உதிரப்பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச்செய்து விட்டன.

அந்தப் பயங்கரப் பைசாக்கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனிதசமுதாயம் இன்றிருப்பதைவிட பன்மடங்கு உயர் நிலையை எட்டி இருக்கும் " என விவேகானந்தர் முழங்கினார். விவேகானந்தர் பேசி விட்டு வெளியில்வந்ததும் ஒரு பெரும்கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காக காத்திருந்தது

அதன் பிறகு விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக்கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள், அயோவா, கேம்பிரிட்ஜ், செயிண்ட் லூயிஸ், வாஷிங்டன், நியூயார்க் போன்ற இடங்களில் எல்லாம் விவேகானந்தரை பேசவைத்து மகிழ்ந்தனர். விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம்பெற்று அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பை பெற்றது

சிகாகோவிலிருந்து உலகில் பலநாடுகளுக்கு விவேகானந்தர் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, விவேகானந்தர் முதன் முதலில் தமிழகத்துக்குதான் வந்தார் . அதுவும் எந்தமன்னர் தமது அமெரிக்க பயணத்துக்கு காரணமாக இருந்தாரோ, அந்தமன்னர் வாழுகின்ற இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் இராமேஸ்வரத்தில் உள்ள குந்தக்கல்லில் தான் விவேகானந்தர் இறங்கினார்.

அவரது வருவதையை அறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி குந்தக்கல்லுக்கு வந்து காத்திருந்தார். கப்பலில் வந்துயிறங்கிய விவேகானந்தர் தமது பாதங்களை முதன் முதலில் தம்தலையில் வைத்து விட்டுத்தான் மண்மீது படவேண்டும் என்றார் மன்னர். ஆனால் மனித நேயம்கொண்ட விவேகானந்தர் அதற்கு இணங்கவில்லை.

பிறகு விவேகானந்தர் ஒரு காலைப்பதித்து மற்றொரு காலை மண்ணில் வைத்த அந்த இடம்தான் இன்றும் 'குந்துக்கால்' என அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.