அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கான லாபிக்காக ரூ 250 கோடி அளவுக்கு செலவு  பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சில்லறை வனிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதி ரத்துசெய்யப்படும் என பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது; இந்தியாவில் சில்லறை வனிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதிகொடுப்பதற்கான லாபிக்காக ரூ 250 கோடி அளவுக்கு வால் மார்ட் நிறுவனம் வாரி இறைத்துள்ளது. 5 முக்கிய நாடுகளில் இந்த அன்னிய_முதலீட்டுக்கான அனுமதி என்பது தோல்வியடைந்த ஒன்றாகி போய்விட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலிருந்த போது காப்பீட்டுத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட வில்லை. லோக்சபாவிலும் ராஜ்ய சபாவில் எப்டிஐ. மீதான விவாதத்தின்போது பெரும்பாலான எம்பி,.க்கள், எங்களது குரலிலேயே பேசினர். ஆனால் அவர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றார் அவர்.

Tags:

Leave a Reply