இந்திய சந்தைக்குள் நுழைய ரூ.125 கோடிக்குமேல் செலவு செய்த  வால்மார்ட் இந்திய சந்தைக்குள் நுழைவதற்காக ஆதரவுதேடும் முயற்சியில், வால்மார்ட் நிறுவனம் சுமார் ரூ.125 கோடிக்குமேல் செலவழித்துள்ளதாக தகவல்வெளிவந்ததை அடுத்து, மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

வால்மார்ட்டினால் மிகப் பெரும் நன்மை அடைந்திருக்கு ம் முதலாவது நபர்கள், மத்திய அமைச்சர்கள், ஆளும் கூட்டணி அரசியல்வாதிகள்தான் என்பது இதிலிருந்து புலனாவதாகவும், எனவே உடனடியாக காங்கிரஸ்கூட்டணி இந்த விஷயத்தில் தனது விளக்கத்தை வழங்கவேண்டும் எனவும், பாரதிய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா தலைவர்கள் தொடர்ச்சியாக அமளியில்ஈடுபட்டதால் மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவில் நடைமுறை சட்டங்கள் படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகநடவடிக்கைகளில் ஆதிக்கம்செலுத்த நினைக்கும் தனியார் நிறுவனங்கள் அரசியல்செல்வாக்குடைய நபர்களின் உதவியை நாடலாம். இதற்காக பணமும் செலவிடலாம். ஆனால், காலாண்டுக்கு ஒருமுறை, யார்யாருக்காக எவ்வளவு செய்யப்பட்டது எனும் கணக்குவிபரத்தை மேல்சபையில் தாக்கல் செய்தாகவேண்டும். அந்த வகையில் வால்மார்ட் நிறுவனம் மேல்சபையில் தாக்கல்செய்த Lobbying செலவு கணக்கின் மூலம் தற்போது வெளியாகியுள்ளது.

அவ்வகையில் கடந்த 2008ம் ஆண்டுமுதல் இந்திய சில்லரை வர்த்தகத்தில் முதலீடு செய்யும்நோக்கில் அமெரிக்க எம்பி.,க்கள், வெளியுறவுதுறை அதிகாரிகளின் கவனிப்புக்காகவும் இந்தியாவுடன் தொடர்புடைய லாபியிங் செலவுகளுக் காகவும், ரூ.125 கோடிக்குமேல் செலவழித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 3 மதங்களில்மட்டும், இந்தியாவுக்குள் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பிலான விவாதம்உள்ளிட்ட விவகாரங்களுக்காக ரூ.10 கோடியை வால்மார்ட் செலவிட்டுள்ளது. இந்த செலவுகளால் மத்தியில் ஆளும்கூட்டணி அரசியல் தலைவர்கள், அரசபிரதிநிதிகள் நன்மை அடைந்திருக்கலாம் என பா.ஜ.க தற்போது இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.