எடியூரப்பாவின் கட்சி விழாவில் கலந்துகொண்டது தொடர்பாக விளக்கம் தர 14 எம்எல்ஏ.க்களுக்கு  உத்தரவு  பாரதிய ஜனதாவிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கியுள்ள கர்நாட மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு , ஆதரவுதந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து , கர்நாடக பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கு, பாரதிய ஜனதா நோட்டீஸ் அனுப்ப முடிவுசெய்துள்ளது.

பெல்காமில் நடைபெற்ற பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது. எடியூரப்பாவின் கட்சி விழாவில் கலந்துகொண்டது தொடர்பாக விளக்கம் தர 14 எம்எல்ஏ.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மேலவை உறுப்பினர் 7 பேரும் பதில் தரவேண்டும் என்றும் பாஜக உத்தரவிட்டுள்ளது

Leave a Reply