பாகிஸ்தான் என்றைக்குமே தனது வாக்கை  காப்பாற்றியதில்லை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக்கின் சர்ச்சைக் குரிய கருத்துக்கு இந்திய அரசின் சார்பில் மறுப்புதெரிவிக்காதது கண்டனத்துக்குரியது . மும்பை தாக்குதல் விசாரணையை வேண்டும் என்றே தாமதம் படுத்தும் பாகிஸ்தான், அதன் முக்கியகுற்றவாளியான ஹபீஸ்சயீத்தை பாதுகாப்பதில் தீவிரம் காட்டிவருவதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்ததாவது; பாகிஸ்தான் என்றைக்குமே தனது வாக்கை காப்பாற்றியதில்லை , முன்னாள் பிரதமர் வாஜ் பாய்க்கு நிறைய வாக்குறுதிகளை தந்து ஏமாற்றியது , பாகிஸ்தானின் அத்து மீறல்களை பொறுத்துக்கொண்டு அந்நாட்டுடன் நட்ப்புறவை வளர்க்க முடியாது என்றார்.

Tags:

Leave a Reply