பாகிஸ்தான் பெஷாவர்நகர் கீசாகவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை முன்னிட்டு 600 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் பிரார்த்தனைமுடிந்து மக்கள் தேவாலயத்தைவிட்டு வெளியே வந்தபோது அவர்களை குறிவைத்து இருஇடங்களில் இன்று தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் குறைந்தது 45பேர் படுகொலை செய்யப்பட்டனர். 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
உடனே அங்கு அவசரநிலை பிரகடனம் படுத்தப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரதமர் நவாஸ்ஷெரீப் இந்த தாக்குதலுக்கு கண்டனம்தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு மதம்கிடையாது. அப்பாவி பொதுமக்களை குறிவைத்து இது போன்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.