வருகிற பாராளுமன்ற தேர்தலில்  450 தொகுதிகளில் போட்டியிட திட்டம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்ததேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 450 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது . நாங்கள் இப்போது பிரதமர்வேட்பாளரை தேர்வு செய்துள்ளோம். பாராளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் முடிந்ததும் எங்களது தேர்தல் பணிகளை தொடங்குவோம்.

முதலில், போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்போம். அடுத்து தேர்தல்பிரசாரத்தை தொடங்குவோம். அதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. மக்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப உரியநேரத்தில் பிரசாரபணிகளை தொடங்குவோம். நாடுமுழுவதும் பா.ஜ.க.,வுக்கு ஆதரவு அலைவீசுகிறது.

மக்களின் எதிர்பார்ப்புகள் எங்களுக்குசாதகமாக இருக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்ததேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 450 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Leave a Reply