பாஜக 450 தொகுதிகளில் போட்டியிடும் லோக்சபா தேர்தலில் பாஜக 450 தொகுதிகளில் போட்டியிடும், இலங்கை படையினரால் தொடர் இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; லோக்சபாதேர்தலில் 450 தொகுதிகளில் போட்டியிடுவோம். 272 தொகுதிகளுக்குமேல் கைப்பற்றி மத்தியில் ஆட்சியை அமைப்போம். லோக்சபாதேர்தலுக்கான கூட்டணி குறித்து இப்போது தெரிவிக்கமுடியாது.

இலங்கை படையினரால் தொடர் இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது பாஜக ஆட்சி அமைத்தால் இந்திய மீனவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணப்படும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு, அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்கு பணிந்துசெல்கிறது. வேட்பாளர்களை வாக்காளர்கள் நிராகரிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிப்பது குறித்துவிவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டவேண்டும் நாட்டின் பொருளாதாரம் தற்போது பலவீனமாக இருக்கிறது என்றார்.

Leave a Reply