பாஜக  ஆட்சிக்குவந்ததும் வருடத்துக்கு 15 சிலிண்டர்கள் மானியத்தில் வழங்கப்படும்மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் வருடம் ஒன்றுக்கு மானிய_விலையில் 15 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்திருக்கிறார்.

சமிபத்தில் கேஸ் சிலிண்டர்மீது கடந்த புதிய கட்டுப்பாட்டை மத்திய

அரசு அறிவித்தது. அதன் படி மானிய விலையில் வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், ‘இந்திய குடும்பம ஒன்றுக்கு சராசரியாக வருடத்துக்கு 15 சிலிண்டர்கள் தேவைப் படுகிறது. 15 சிலிண்டர்களை மானியவிலையில் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு இதனை செய்யா விட்டால் மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்ததும் வருடத்துக்கு 15 சிலிண்டர்கள் மானியத்தில் வழங்கப்படும்’ என்றார்

Tags:

Leave a Reply