கருணாநிதியின்  குறைந்தபட்ச  செயல்திட்டம் பா.ஜ.க்.வோடு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே கூட்டு சேர்ந்ததாகவும் அதன் உண்மையான முகம் தெரிந்தவுடன் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

ரூ 1,76,000 கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய 2ஜி ஊழலில் தொடர்புடைய தனது மகள் கனிமொழியையும் பேரன் தயாநிதி மாறனையும் வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக கருணாநிதி எத்தனையோ காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்.சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் முதலில் ஐ.மு.கூ. அரசுக்கு எதிராக எந்தக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தாலும் ஆதரிப்போம் என்று கூறிய கருணாநிதி பின்பு தலைகீழ் பல்டியடித்து, கோடிக்கணக்கான வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததும் கூட தன் குடும்பத்தினரை 2ஜி வழக்கிலிருந்து காப்பாற்றத்தான். ஆனால், பா.ஜ.க.வரக்கூடாது என்பதற்காகத்தான் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஒரு பொய்யை சிறிது கூட வெட்கமில்லாமல் சொல்கிறார்.

அயோத்தியில் சிறிய அளவில் இராமருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது 1992ல்; இதற்குப் பிறகுதான் ( 1999 )கருணாநிதி பா.ஜ.க.வோடு கூட்டே வைத்தார்.அயோத்தியிலிருக்கும் இராமர் ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்கள் சொந்த ஊரான குஜராத் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 60 ஹிந்துக்கள் கோத்ரா என்ற இடத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக் பெரும் வன்முறைக் கலவரங்கள் நிகழ்ந்த ஆண்டு 2002. அப்போதும் கருணாநிதி பா.ஜ.க. கூட்டணியில் ஒட்டிக்கொண்டுதான் இருந்தாரே தவிர வெளியேறவில்லை. . என்வே குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கும் கருணாநிதி பாஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறியதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

ஆனால், பா.ஜ.க. கூட்டணியை விட்டு ஏன் 2004ல் கருணாநிதி வெளியேறினார் ..?அதற்கு 2 காரணங்களிருக்கின்றன.

1)முரசொலி மாறன் இறந்த பிறகு தனது குடும்பத்திலிருந்து ஒருவருக்கு ( கனிமொழி அல்லது தயாநிதி மாறனுக்கு ) மத்திய அரசில் பதவி வழங்க வேண்டும் என்று கருணாநிதி கேட்டார். ஆனால் வாஜ்பாய் அதற்கு மறுத்துவிட்டார்.

2)ஐ.மு.கூ. ஆட்சியின்போது, மத்திய அமைச்சர்களாயிருக்கும் தி.மு.க.வினர் எவ்வளவு ஊழல் செய்தாலும் அது ஆயிரக்கணக்கான கோடிகளாயிருந்தாலும் பிரதமர் மன்மோகன்சிங்கும் சோனியாவும் மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்க அனுமதிக்கின்றனர். ஆனால், பா.ஜ.க.ஆட்சியின்போது, வாஜ்பாய் அவர்கள் தி.மு.க. அமைச்சர்கள் ஊழல் செய்ய அனுமதிக்கவில்லை.

இவ்விரண்டு காரணங்களுக்காகத்தான் கருணாநிதி அப்போது பா.ஜ.க.கூட்டணியை விட்டு வெளியேறினார். ஆனால், இப்போது குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை பா.ஜ.க.மீறியது அது இது என்று மக்கள் காதுகளில் பூ சுற்றுகிறார்.

ஆனால், ஒரு விசயம் உண்மைதான். கருணாநிதியின் அரசியலுக்கு ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டம் உண்டு. கருணாநிதிக்கு தான், தனது மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள் கொள்ளுப்பேத்திகள் மற்றும் பிற உறவினர்கள் அனைவரும் மத்திய மற்றும் மாநில அரசுகளில் பதவிகளில் இருக்க வேண்டும்; அந்தப் பதவிகளைப் பயன்படுத்தி கோடி கோடியாய் சம்பாதித்து பெரும் வள்த்தோடு தனது குடும்பம் இருக்க வேண்டும். இந்தப் பொதுத் திட்டத்தை வாஜ்பாய் அரசு மீறியதால்தான் 2004ல்கருணாநிதி பா.ஜ.க.கூட்டணியை விட்டு வெளியேறினார். இந்தப் பொதுத் திட்டத்தை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டிருப்பதால்தான் அவர் ஐ.மு.கூ.கூட்டணியில் இருக்கிறார். எப்போதாவாது சோனியா இந்தப் பொதுத் திட்டத்தை மீறினால் அவ்வளவுதான் கருணாநிதி அப்போது ஐ. மு.கூ. வை விட்டும் வெளியேறுவார்.

நன்றி ; கு.காந்தி ராஜா,
எண்ணூர், சென்னை – 600057

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.