வீர சிவாஜிக்கு புத்தி புகட்டிய பாட்டி வீர சிவாஜி ஒருமுறை முகலாய மன்னனிடமிருந்து தப்பித்து மாறுவேடத்தில் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகிலிருந்த ஒரு வீட்டிற்குச்சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டு க்கொண்டார். அந்த வீட்டில் இருந்த வயதான பாட்டி அப்போதுதான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுடசுட சோற்றைப்பரிமாறியது.

அவசரக் குடுக்கையான சிவாஜி பசிதாளாமல் வேக வேகமாய் சுடுசோற்றின் நடுவே கைவைத்துச்சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிடமுடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட_பாட்டி… ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜிமாதிரி விவரம்புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்னசின்ன கோட்டைகளை கவர்ந்து விட்டு அப்பறமா பெரியகோட்டைய ஆக்கிரமிக்கணும்… எடுத்ததுமே மிகப்பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் படகூடாது.. அதுபோல நீ ஓரத்துல இருக்கிர சோற்றை முதலில் சாப்பிட்டுமுடி… அதற்குள் நடுவில் இருக்கும் மலைக் குவியல் சோறு ஆறியிருக்கும்… பிறகு அதை சாப்பிடலாம் " என்றதும் சிவாஜிக்கு தூக்கி வாரிப்போட்டது. இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்துகொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக்கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றிசொல்லி அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தார்..

உங்களுக்கான பாடம் மத குருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரியஎழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை…. நீங்கள் கடந்துசெல்லும் ரோட்டில் எதிர்வரும் காலில்லாத மனிதனிடம்கூட இருக்கலாம்…. யாரையும் துச்சமாக நினைக்காமல் எல்லோரிட மிருந்தும் எதைக் கற்றுக்கொள்ள முடியுமோ அதைக் கற்றுக்கொள்ளுங்கள்… நல்லதை பிறர்க்குசெய்யுங்கள். கெட்டதா .? அதையும் பிறரை செய்யவேண்டாம் என அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் !

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.