நமது கல்வித்திட்டத்தில் ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள் கற்பிக்கப்படவேண்டும் ராமகிருஷ்ண பரமஹம் ஸர், ஸ்வாமி விவேகானந்தர், நாராயணகுரு போன்ற ஆன்மிக_குருக்களின் தத்துவங்களையும் உபதே சங்களையும் பள்ளி பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு அனைத்து அரசுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார் .

கேரள மாநிலத்தில் நாராயணகுரு நிறுவிய சிவகிரி மடத்தின் 80ம் ஆண்டுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: மன்னர்களையும் போர் நாயகர்களையும் பற்றி கற்பிப்பதோடு நின்றுவிடாமல் . நமது நாட்டின் பெரும்துறவிகள், ஆன்மிக தலைவர்கள் போன்றோரின் உபதேசங்களும் பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டும். அப்போது தான் குழந்தைகளிடமும் இளைஞர்களிடமும் ஆன்மிக சிந்தனைகளை ஆழமாக பதியவைக்கமுடியும்.

ராமகிருஷ்ண பரமஹம் ஸர், ஸ்வாமி விவேகானந்தர், நாராயணகுரு போன்ற ஆன்மிக_குருக்களின் தத்துவங்களையும் உபதே சங்களையும் பள்ளி பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்கு அனைத்து அரசுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கேரள பள்ளி பாடத் திட்டத்தில் அடுத்த ஆண்டிலிருந்து நாராயண குருவின் தத்துவங்கள் சேர்க்கப்பட_உள்ளன. நம் நாட்டின் கல்வியை மேம்படுதுவதற்கு அதுதான் சிறந்தவழி. மத்திய அரசும் இதனை பின்பற்றவேண்டும்.

நாராயண குருவின் ஜாதியைக் குறித்த கருத்துகள் முக்கியமானவை . ஜாதிகளின் பெயரால் மனிதகுலத்தை பிரிக்கக்கூடாது. உயிரினம் எனும் அளவில் நோக்கும்போது மனித குலத்தை ஜாதி மதங்களின் பேரில் வேறுபடுத்தி காணமுடியாது. ஒருமனிதன், ஹிந்துவாகவோ முஸ்லிமாகவோ கிறிஸ்துவராகவோ இருக்கலாம். ஆனால் ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனைப் பிரித்துவைக்க அது பயன்படக்கூடாது. நல்ல மனிதனாக ஒருவன் இருப்பது தான் முக்கியம் என்றார் அத்வானி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.