உலக நாடுகளை உலுக்கும், புவி வெப்ப மயமாதல், தீவிரவாதம் போன்ற பிரச்னைகளுக்கு, இந்திய ஆன்மிகத்தில் தீர்வு இருக்கிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேலும் இது குறித்து அவர்

பேசியதாவது ; புவி வெப்ப மயமாவதால், உலகின், இயற்கை சூழ் நிலை மாறிவருகிறது. இதனால், மனித சமுதாயம், பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பயங்கரவாதம், உலக நாடுகளுக்கு, பெரும்சவாலாக உள்ளன. இவற்றுக்கு என்னதான் தீர்வு என்று தெரியாமல், உலக மக்கள், கவலை அடைந்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் இளைய தலை முறையினரின் திறமையை, உலக நாடுகள் உணர்ந்துள்ளன. குறிப்பாக, தகவல் தொழில் நுட்ப துறையில், நம் நாட்டை சேர்ந்த இளைஞர்கள், சர்வதேச அளவில், சாதனைகளை நிகழ்த்து கின்றனர். ஆனால், நமது ஆன்மிகத்தில் இருக்கும் மிகச்சிறந்த போதனைகளை, சர்வதேச சமுகம் , இன்னும் முழுவதும் உணரவில்லை.

நம் நாட்டை சேர்ந்த மகான்கள், இயற்கையை தாயாக கருதினர் . அதற்க்கு மதிப்பும் தந்தனர். அதேபோன்று , சக மனிதர்களை, நமது உற்றார், உறவினர் போன்று , கருதவேண்டும் என்றும், மகான்கள், போதித்துள்ளனர். அவர்களின் கொள்கையை பின் பற்றினால், உலகில் காணப்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகாணலாம். என்று நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.