காங்கிரஸ்சில  தகுதி இல்லாதவர்களுக்கு எந்த பதவி வேண்டுமானாலும் கிடைக்கலாம் காங்கிரஸ்சில தகுதி இல்லாதவர்களுக்கு எந்த பதவி வேண்டும் என்றாலும் கிடைக்கலாம் என்பதற்கு தற்போது அந்த கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ராகுல்காந்தியே உதாரணம் என்று மேல்-சபை எதிர்க் கட்சி தலைவரும், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவருமான அருண்ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை ஒருவரின்கையில் ஒப்படைக்கிறார்கள். இது காங்கிரஸ்சின் பரம்பரை ஜனநாயகத்தை எடுத்து காட்டுகிறது. கடும் விலைவாசி உயர்வு, ஆட்சி நிர்வாக குளறுபடி , ஊழல் போன்ற கேள்விகளுக்கு காங்கிரஸ் மாநாட்டில் பதில் தரப்படவில்லை .

இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரேபதிலாக, உலகின் பெரிய ஜனநாயக_நாடான இந்தியாவை, ஒரு பரம்பரை ஜனநாயகமாக மாற்றி உள்ளனர். பல பிரச்சினைகளில் ஒருவரது உண்மை நிலை என்ன என்பது குறித்து அறியாமல் அவருக்கு பெரிய ஜனநாயக நாட்டின் தலைமைபொறுப்பை வழங்கமுடியாது.

பாரதிய ஜனதா அப்படிப்பட்ட கட்சியல்ல. கட்சியில் தகுதி, திறமைவாய்ந்த ஒருவருக்கே பதவிகிடைக்கும். சாதி, குடும்ப அரசியலுக்கு இங்கு இடமில்லை. கட்சியில் தகுதி உள்ளவர்களுக்கு பதவிகள்கிடைக்கும் என்ற நிலை உள்ளது என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.