பா.ஜ.க தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் ஜனவரி .23ம் தேதி நடைபெறுகிறது  பா.ஜ.க தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை ப.ஜ.க.,வின் தலைமை அலுவலகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:- பாஜக. தேசிய_தலைவர் பதவிக்கான தேர்தல், ஜன.23ம் தேதி, புதுடெல்லியில் இருக்கும் கட்சியின்

தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது . ஜனவரி .23ம் தேதி காலை 10 மணியிலிருந்து 11.30 மணி வரை வேட்புமனு தாக்கலும், வேட்புமனு பரிசீலனை 11.30 மணி முதல் 12 மணி வரையும் நடைபெறுகிறது . வேட்புமனுவை வாபஸ்பெற விரும்புபவர்கள் பகல் 12 மணி முதல் 12.30 மணிக்குள் திரும்பப்பெறலாம்.

ஒன்றுக்கு அதிகமான வேட்பாளர்கள் தலைவர்பதவிக்கு போட்டியிட்டால், தேர்தலுக்கான தேதி பிறகு அறிவிக்கப்படும். போட்டி வேட்பாளர்கள் யாரும் வேட்புமனுக்களை தாக்கல்செய்யாத நிலையில், ஜனவரி 23ம் தேதி பகல் 12.30 மணியளவில் தேர்தல்முடிவு வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply