பழைய சாதத்தின் மகிமை  முதல்நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்_சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்தான் பி6, பி12 ஏராளமாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப்பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே 2 சிறிய வெங்காயம் சேரும் போது, நோய் எதிர்ப்புசக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக்காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலும் நம்மை நெருங்காது !

பழைய சாதத்தின் மகத்துவம் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியவற்றில் இருந்து சில:

1. "காலை சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தை குடிப்பதால், உடம்பு லேசாகவும், அதேசமயம் சுறு சுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சக்கணக்கான நல்லபாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும்போது உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப் படுத்தும்.

4. இதிலிருக்கும் நார்ச் சத்து, மலச் சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச்செய்கிறது.

5. பழைய சாதம் உணவு முறையை சிலநாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்லவித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து விட்டதோடு, உடல்எடையும் குறைந்தது." என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்ன எனில் உடலுக்கு அதிகமான சக்தியைதந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலைசெய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவைகூட சட்டென சரியாகிவிடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக்கொடுத்து வர, ஆச்சரிய படும் வகையில் பலன்கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்புசக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்தநோயும் அருகில் கூட வராது.

10. ஆரோக்கியமாக அதேசமயம் இளமையாகவும் இருக்கலாம்".

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.