சுஷில்குமார் ஷிண்டேவின் கருத்துக்கு எதிர்ப்புதெரிவித்து 24-ம் தேதி நாடுதழுவிய மிகப் பெரிய போராட்டம் பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ். இயக்கம் இந்து தீவிரவாதத்தை வளர்க்கிறது எனும் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் கருத்துக்கு எதிர்ப்புதெரிவித்து வரும் 24-ம் தேதி நாடுதழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-

மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவை பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ஷிண்டேவின் கருத்துக்கு எதிர்ப்புதெரிவித்து வரும் 24-ம் தேதி நாடுதழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும்.

இந்துக்களையும் அவர்களது கலாச்சாரத்தை தொடர்ந்து அவமதித்துவருவதை பாஜக பொறுத்துக் கொள்ளாது. பாஜக ஒருபோதும் தீவிரவாதத்துடன் மதத்தை தொடர்பு படுத்தியதில்லை. தீவிரவாதிகளுக்கு மதம்கிடையாது. மத்திய உள்துறை மந்திரி பொறுப்பற்று பேசிவருகிறார். தொடர்ந்து அதை போன்று பேசி வருவதை நாங்கள் மிகவன்மையாகவும் கடுமையாகவும் எதிர்க்கிறோம்.

என்ன பேசுகிறோம் என புரியாமல் அர்த்தமற்றும் தீங்காகவும் அவர் பேசிவருகிறார். எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பிவைக்கும் பாகிஸ்தானுக்கு இவரின்கூற்று மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவின் ஆன்மீக, மத, கலாச்சார , நாகரீக பரம்பாரியத்தினை அவமதித்து ஷிண்டே பேசியிருப்பதை சோனியாகாந்தி அனுமதிக்கிறாரா? காவிஉடை இந்தியாவின் ஆன்மீக மற்றும் மத தொடர்பான ஆடையாக உள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின்போதும் பயன்படுத்தப்பட்ட இந்த காவிகலர் தேசியக் கொடியிலும் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்று அவர் கூறினார்.

Leave a Reply