மும்பை தீவிரவாத தாக்குதல் சதியில் தொடர்புடைய பயங்கரவாதி டேவிட்ஹெட்லியின் முன்னாள் மனைவி ஃபைசாவிடம் விசாரிக்க அனுமதி கோரி மொராக்கோ அரசுக்கு மத்திய உள்துறை_அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஹெட்லி, இப்போது நீதிமன்றத்தில் தண்டனையை எதிர் நோக்கியுள்ளார்.

அவர் தனது மனைவியுடன் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்து மும்பை உள்ளிட்ட சில நகரங்களுக்கு சென்றுள்ளார். மும்பை குறித்த விவரங்களைத் தெரிந்துகொண்டு, அதன் மூலம் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு உதவியுள்ளார். லஷ்கர்இ-தொய்பா பயங்கரவாத_இயக்கத்தின் தலைவர் ஹஃபீஸ் சையது உள்ளிட்ட சதிகாரர்கள் பலருடன் அவருக்கும் நெருங்கியதொடர்பு இருந்துள்ளது.

ஹெட்லி, அமெரிக்காவில் தண்டனைபெற இருப்பதால் அவரிடம் இந்திய அரசினால் விசாரணை நடத்த முடியவில்லை. அதேநேரத்தில் அவரது முன்னாள் மனைவி ஃபைசாவிடம் விசாரணை நடத்தி தகவல்களைப்பெற்றால், மும்பை தாக்குதலில் பயங்கரவாதி ஹஃபீஸ்சையது, பாகிஸ்தான் உளவுஅமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் முன்னாள் அதிகாரிகளுக்கு உள்ளதொடர்பை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கமுடியும்.

ஃபைசா இப்போது ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருக்கிறார் . அவரிடம் விசாரணை மேற்கொள்ள உதவி அளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சக சார்பில் அந்த நாட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.