சிறுவர்களுக்கான வயது வரம்பை 16 ஆக குறைக்க பரிந்துரை மருத்துவ மாணவி கர்ப்பழிக்கபட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. பெண்களுக்கு எதிரான கொடிய குற்ற செயலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தண்டனை வழங்கவேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன் கொடுமை சட்டங்களை கடுமையாக்கவும், அதிகபட்ச தண்டனை வழங்கும்வகையிலும் சட்டத்திருத்தம் செய்வதற்காக நீதிபதி ஜேஎஸ்.வர்மா தலைமையிலான குழு அமைக்கப் பட்டது. அந்த குழு தனது அறிக்கையை உள்துறை அமைச்சகத்தில் தாக்கல்செய்தது.

சுமார் 200 பக்கங்கள்கொண்ட அந்த அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், பாலியல் வன்கொடுமை சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

காவல் நிலையங்களில் 25சதவீதம் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படவேண்டும், சிறுவர்களுக்காக வயதுவரம்பை 16 ஆக குறைக்கவேண்டும், பாலியல் குற்றங்களில் தண்டனை அனுபவித்து_வருபவர்களுக்கு மன்னிப்பு வழங்க கூடாது, குற்றம் சாட்டப் பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

Tags:

Leave a Reply