ஒரிசா மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணா மற்றும் என்ஜினீயர் பபித்ரா மஜி ஆகியோர் கடந்த16ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் பரிந்துரை செய்த 3 மத்தியஸ்தர்களுடன் ஒரிசா மாநிலஅரசு முன்று நாளாக பேச்சுவார்த்தை நடத்திவந்தது

அதில், 5 மாவோயிஸ்டு தலைவர்கள் மீதான-வழக்குகளை ஒரிசா மாநில அரசு வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்று கொண்டது. மேலும், 12மாவோயிஸ்டு முக்கியஸ்தர்கள் ஜாமீன் மூலம் விடுதலை அடைந்தனர்.

இதை தொடர்ந்து கலெக்டரும், ஜுனியர் என்ஜினீயரும் 48மணி நேரத்திர்க்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என மத்தியஸ்தர் ஹர்கோபால் அறிவித்தார்.

Tags:

Leave a Reply