தினசரி பூஜை ;நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க கூடியது தினசரி வழிபாடு நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க
கூடியது. குடும்ப பிரச்சனைகள், தொழில் பிரச்சனைகள், குழந்தைககளின் படிப்பு,….போன்ற பல இடத்து பிரச்சனைகளை பிரார்த்தனை மூலம் வெகுவாக குறைக்க முடியும்.

பிரார்த்தனையின் பலனை அதிகரிக்க பல குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் சில முக்கியமான விஷயங்கள் உடலால், பேச்சால், மனதால்- தூய்மை அதாவது குளித்து முடித்தவுடன் பூஜைக்கு செல்ல வேண்டும், பூஜை முடியும் வரை உடலால் வேறு எதையும் தொடாமல், வேறு எதுவும் தன் உடலையும் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பேச்சினாலும் தெய்வ விஷயங்களை தவிர வேறு எதையும் பேசாமலும், வேறு யாரும் எதையும் பேசி கேட்க வேண்டிய நிலை இல்லாமலும் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும். மனதினாலும் வேறு எதையும் நினைக்க வேண்டிய, திட்டமிட வேண்டிய
அவசியம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் 100% சரியாக இருந்தாக வேண்டும்,

இல்லையென்றால் தெய்வ குற்றம்-என்று எதுவும் கிடையது.
ஆனால் இதை கடைபிடிக்கும் அளவுக்கு நற்பலன்களும், அதில் குறைகள் வரும் அளவுக்கு பலனில் சற்றுக் குறைவும் இருக்கும். வழிபாட்டு இடமான பூஜை அறையில் பல தெய்வங்களின் படங்கள் இருப்பது நன்மையே, ஆனால் தினசரி அத்தனை படங்களையும் துடைத்து அலங்காரம் செய்வது சிரமம். அதனால் ஒரு இஷ்ட தெய்வத்தை முடிவு செய்து கொண்டு அதற்கு தினமும் அலங்காரம் செய்வது நல்லது.

அவர் அவர் மனம் விருப்பப் படி வழிபாடு செய்யலாம் தவறு இல்லை. தெய்வம் கோபித்துக் கொள்ளாது, என்றாலும் கூட கோவிலில் செய்யப்படும் வழிபாட்டு முறைகளை கவனித்து அதையே எளிமையாக வீட்டில் செய்வது நல்லது, ஏன் என்றால் அந்தப் படி முறைகள் நம் மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனையில் மனதை லயிக்கச்செய்ய உதவுகிறது.

அதனால் பிரார்த்தனையின் பலனும் அதிகமாகிறது. ஆனாலும் கூட பூஜையின் முறைகளை தெரிந்தவர்களிடம் கேட்டுக் கற்றுக் கொண்டு செய்வது சிறப்பே.!

நன்றி ; ஆச்சார்யர் பாரத சைதன்யர் click more

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.