குஜராத்தில் பா.ஜ.க., தொடர்ந்து 5வது முறையாக  ஆட்சி அமைக்கிறது குஜராத்தில் சட்ட மன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 122 தொகுதிகளில் பாரதிய ஜனதா முன்னிலை வகிக்கிறது . காங்கிரஸ் முன்னிலையில் 56 தொகுதிகளில் உள்ளது. இதனை தொடர்ந்து குஜராத்தில் மீண்டும்

பாரதிய ஜனதா வெற்றிபெற்று நரேந்திரமோடி 3வது முறையாக ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது

குஜராத் சட்ட மன்ற தேர்தல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து கருத்துகணிப்புக்களும் மோடியின் வெற்றியை உறுதி செய்து வந்தன . பாரதிய ஜனதா 2014ம் வருடம் நடைபெற இருக்கும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்கும் என நம்பிக்கை அனைவரது மனதிலும் இருப்பதால் இந்த வெற்றி அவரது செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்று கருத்து கணிப்புக்கள் தெரிவித்தன . தற்போது மோடி வெற்றி பெற்றதன் மூலம் குஜராத்தில் தொடர்ந்து 5வது முறையாக பா.ஜ.க., ஆட்சி அமைத்து புதிய சாதனை படைக்கிறது .

Leave a Reply