மாவோயிஸ்ட்  தாக்குதலில் காவல்துறை  சூப்பிரெண்டு உட்ப்பட 5 பேர் பலி  ஜார்க்கண்ட்டில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளன . இதனால் ஆத்திரமடைந்துள்ள மாவோயிஸ்டுகளும் தங்கள் தாக்குதல்களை அதிகரித்துள்ளன.

இந்நிலையில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம்நிறைந்த தும்கா மாவட்டத்தில் காவல்துறையினர் சென்ற வாகனங்களின் மீது மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் பாக்கூர் மாவட்ட காவல்துறை சூப்பிரெண்டு அமர்ஜித்பாலிகார் மற்றும் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்

இதனை தொடர்ந்து சம்பந்த பட்ட இடத்துக்கு 2 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ்படை விரைந்துள்ளது. மாநில காவல்படையை சேர்ந்த பாலிகார், சமீபத்தில் தான் பாக்கூர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றிருந்தார்.

Leave a Reply