டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபைதேர்தல், தீபாவளி பண்டிகைக்குப்பின் நடைபெறும் என்று, தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது என்றும்தெரிவித்தார்.

ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதசம், சத்தீஷகர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைதேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மிசோரம் மாநிலத்தைதவிர மற்ற 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் பலப் பரீட்சை நடைபெறுகிறது.

டெல்லியில் ஷPலாதீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக பதவிவகித்து வருகிறது. 10 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது.டெல்லி, மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும். ஆனால், பாதுகாப்பு படையினரை அனுப்புவதற்கு வசதியாக ஓட்டுப் பதிவு தேதிகளில் மாற்றம் இருக்கும் என்று தெரிவித்தார். பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் சத்தீஷகரில், 2 கட்டங்களாக தேர்தல்நடைபெறும். மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தாக்கம்நிறைந்த பகுதிகளில் ஒரு நாளும், மற்றபகுதிகளில் ஒருநாளும் ஓட்டுப் பதிவு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 மாநில சட்ட சபை தேர்தல் நவம்பர் மாதம் 2ம் தேதி வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்குப் பின் இந்ததேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply