பீகாரில் நிதீஷ்குமார் அரசு தனது 5 வருட ஆட்சிகாலத்தை முழுமையாக்காது என பாஜக, தெரிவித்துள்ளது.

பீகாரில் தற்போதுள்ள சூழ்நிலையில், நிதீஷ் குமார் அரசு நீடிக்காது என்று விரைவில் அங்கு சட்டமன்றதேர்தல் வரவாய்ப்பு உள்ளது என்றும் பீகார் சட்ட சபை துணை சபா நாயகரும் மாநில பாஜக.,மூத்த தலைவருமான அமரேந்திரா பிரதாப்சிங், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., ஜெ.டி(யு) கூட்டணி உடைந்தபிறகு பீகார் அரசு காட்டுதர்பாராக மாறிவி்ட்டது.சட்டம்ஒழுங்கு கடந்த 5 மாதங்களில் மிகவும் மோசமடைந்தது. பாஜக., ஜெ.டி(யு) கூட்டணியாக இருந்தபோது அரசு நன்றாக இயங்கியது. அடிப்படைதேவைகள், வசதிகள் என அனைத்தும் மக்களுக்கும் கிடைத்தது. தேசியகட்சியான பா.ஜ.க., ஒருபோதும் கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் செய்தது கிடையாது. கூட்டணி கட்சிகள்தான் தேசிய கட்சியான பாஜக.,வுக்கு துரோகம் செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

Leave a Reply