வடக்கு காஷ்மீரில் உள்ள ராணுவமுகாம் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவர், சகவீரர்கள் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை ராணுவமும் உறுதி செய்துள்ளது.

காஷ்மீரின் கந்தர் பால் மாவட்டத்தில் உள்ள மனாஸ் பால் பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவீரர், இன்று காலை துப்பாக்கியால் சரமாறியாக சுட்டுள்ளார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னர் அந்தவீரர் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உயிரிழந்த அனைத்து வீரர்களும் 13 ராஷ்டிரிய ரைஃபல் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ராணுவ உயர் அதிகாரிகள் அனைவரையும் சம்பவ இடத்தில் ஆய்வுநடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை. வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிளவு இதற்குகாரணமாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

Tags:

Leave a Reply