மளிகை கடைகளில் 5 கிலோ சமையல் எரி வாயு விற்பனைசெய்யும் திட்டத்தினை டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்

சமையல் கேஸ் சிலிண்டர், வினியோகஸ்தர்கள் மூலம் வீடுகளுக்கு வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது.சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் பெட்ரோல் பங்குகளிலும் சமையல் எரிவாயு 5 கிலோ சிலிண்டர்கள் கிடைக்கிறது.

தற்போது இந்ததிட்டத்தை அனைத்து நகரங்களிலும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கும் மத்திய அரசு விரிவுபடுத்தி வருகிறது. இதுமட்டுமின்றி பெரியமளிகை கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நல்லாட்சி தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதை தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை தற்போது தாராள மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் சிலிண்டர்கிடைக்கிறது. நல்லாட்சி தினத்தில் இந்ததிட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மளிகை கடைகளில் ரூ.351க்கு 5 கிலோ சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply