சாரதா நிதிநிறுவன மோசடி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் மாதங் சிங்கை 5 நாள் காவலில்வைத்து விசாரிக்க சிபிஐ.,க்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, கொல்கத்தா அலிப்பூர் நீதி மன்றத்தில் நீதிபதி மணி குண்டல ராய் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மாதங்க் சிங்கை 7 நாள்கள் காவலில்வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. ஆனால் நீதிபதி 5 நாள்கள்மட்டும் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கினார்.

சிபிஐ விசாரணையின்போது மாதங்க் சிங்குடன் வழக்குரைஞர் இருக்க அனுமதி அளிக்கவேண்டும் என்று அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்தக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீதிபதி அனுமதி வழங்கினார்.

Leave a Reply