நதிநீர் போக்குவரத்து மசோதா வரும் 5ம் தேதி பார்லியில் தாக்கல்செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நாடுமுழுவதும் உள்ள நதிகளை போக்குவரத்திற்கு பயன் படும் வகையில் மாற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில்கொண்டு 101 நதிகளை மேம்படுத்தும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் இதுகுறித்த மசோதா வரும் 5-ம் தேதி பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தற்போதைய நிலையில் நாடுமுழுவதும் 14 ஆயிரத்து 500 கி.மீ., தொலைவிற்கு ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் அமைந்துள்ளது. இருப்பினும் இதனை போக்கு வரத்திற்கு ஏற்றவகையில் முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகி்ன்றன. நதி நீர் போக்குவரத்து மூலம் விவசாயதிற்கான பாசனதேவை மட்டும் இன்றி சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் மூலம் ஆகும் செலவினமும் குறைவாக கொண்டிருக்கும் என அமைச்சர் நிதின்கட்காரி தெரிவி்த்தார்.

Leave a Reply